Wednesday, May 09, 2007

சின்ன சின்ன ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை

(சின்ன சின்ன ஆசை)

மல்லிகை பூவாய் மாறிவிட ஆசை
தென்றலை கண்டு மாலை இட ஆசை
மேகங்களை எல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களை எல்லாம் விட்டு விட ஆசை
கார்குழலில் உலகை கட்டி விட்ட ஆசை

(சின்ன சின்ன ஆசை)

சேற்று வயலாட நாற்று நாட ஆசை
மீன் பிடித்து ஆற்றில் விட ஆசை
வானவில்லை கொஞ்சம் உடுத்தி கொள்ள ஆசை
பனி துளிக்கு உள்ளே நானும் படுத்து கொள்ள ஆசை
சித்திரத்து மேல சேலை காட்ட ஆசை

(சின்ன சின்ன ஆசை)

1 comment:

  1. Anonymous10:36 AM

    Great...Continue the kirukkalkal!!! Pun intended.

    ReplyDelete