அப்பா பள்ளிகூடத்திலே திருக்குறள் போட்டிலே நான் தான் பர்ஸ்ட்.
வெரிகுட் யார் அம்மா சொல்லிக் கொடுத்தாங்களா.
இல்லப்பா, நானே கத்துக்கிட்டேன்.
அப்பா, நான் தான் டென்த்ல எங்க ஸ்கூல்ல பர்ஸ்ட்.
பயங்கர புத்திசாலி பொண்ணு. ட்யூஷன் இல்லாமலே நல்ல மார்க் வாங்கிட்டியே. வெரிகுட்.
அப்பா,எந்த காலேஜ், எந்த கோர்ஸ் பா படிக்க?
நீயே முடிவேடுமா. உனக்கு தெரியாதா?
அப்பா, சம்பளத்தை எப்படி சேமிக்கறது. எதிலே முதலீடு பண்றது.
என்னம்மா என்னைக் கேட்டுட்டு.நீ எல்லாம் கரெக்ட்டாதான் செய்வே. நீயே முடிவேடுமா.
அப்பா எங்க ஆபிஸ்லா ஒரு பையன். அவரை எனக்கு புடிச்சுருக்கு.அதனால...
அடி கழுதை.உனக்கு என்னா தெரியும்னு நீயே இப்படி ஒரு முடிவுக்கு வந்த. வீட்ல பெரியவங்க நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்?
ஹா ஹா ஹா நன்றாக இருந்தது. Any reflection of personal experience? :-)
ReplyDeleteillave illai :) :)
ReplyDelete