Monday, May 24, 2010

தமிழ் திரைப்பட பாடல்கள் எழுதுவது எப்படி?

 மிகப்  பிரபலமான  தமிழ் திரைப்பட பாடல்கள் எழுத வேண்டும் என்பது  என் ரகசியக் கனவு லட்சியங்களில் ஒன்று. அதுவும் குறிப்பாக காதல் பாடல்கள்!
தினசரிகளில் கட்டுரை எழுதிய காலங்களில் கவிதை எழுதுவது குதிரைக் கொம்பு, மிகுந்த கற்பனா சக்தி வேண்டும், நேரடி அனுபவம் வேண்டும் என்றெல்லாம் பலவாறாக எண்ணியது உண்டு. என்னால் எழுதவே முடியாது என்றெல்லாம் கூட பயந்தது உண்டு.  முதன் முதலாக கிறுக்கிய  போது[அது ஒரு ஒப்பாரியாக இருந்தா போதிலும்] அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.

வேற்று மொழிக்காரர்கள் தமிழில் பாடுவது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம் இல்லை. தமிழ் பாடல்களில் ஒரு சில[ஆயிரம்] குறிப்பிட்ட   வார்த்தைகள் தான் மறுபடி மறுபடி வரும் என்னும் பொருள் படுமாறு ஹரிஹரன் ஒரு பேட்டியில் சொன்னதை படித்ததாக நினைவு! அப்படி என்றால் எழுதுவதற்கும் ஒரு சில வார்த்தைகள் தெரிந்து இருந்தால் போதுமல்லவா? [இல்லை பாடல் எழுத சில குறிப்பிட்ட ஆயிரம் வார்த்தைகள் தெரிந்து இருந்தால் போதும் என்று வேறு எங்கேயாவது படித்தேனா என்று குழப்பமாய் உள்ளது].

சொந்த கருத்தோ சுட்ட கருத்தோ  சற்று யோசித்து பார்த்தால் இது உண்மை என்று தான் தோன்றியது! சங்க கால குறுந்தொகை பாடல்களின் கருப் பொருளும் உவமைகளும் இன்றைய நிலைமைக்கும்
பொருத்தமாய் உள்ளது.  அதற்காக பாடல்கள் எழுத இதை எல்லாம் கஷ்டப்பட்டோ இஷ்டப்பட்டோ படிக்க வேண்டிய அவசியமில்லை.

ஏதேனும்  டேட்டா பேசில் ஆயிரம் தமிழ் பாடல்களின் வரிகளை ஏற்றவும். எந்த வார்த்தைகள் எல்லாம் அதிகம் பயன் படுத்த படுகின்றன, அந்த வார்த்தைகளை எல்லாம் வேறு வார்த்தைகள் மூலமாக சொல்ல முடியுமா, எந்த சந்தர்பத்தில் எவ்வாறு பயன் படுத்த படுகின்றன என்று எல்லாம் பார்த்து வைத்து கொள்ளவும்.  இதை ஒருவாறு செம்மை படுத்தினால் நீங்களும் அடுத்த கவி குறு நில மன்னர் நீங்கள் தான்!

நம்ப முடிய வில்லையா?

"உடையென எடுத்து எனை உடுத்து" இது பல வருடங்களுக்கு முன்னர் காதலர் தினம் என்னும் படத்தில் ரோஜா ரோஜா எனத் தொடங்கும் பாடலில் வாலி எழுதிய வரிகள்

"உடை களைவீரோ உடல் அணிவீரோ" இது இப்பொழுது ராவணனில் கள்வரே எனத் தொடங்கும் பாடலில் வைரமுத்து எழுதியது.

"ஒழுக்கங்கள் என்பது ஊர்களை பொருத்தது"இது தசாவதாரம்  படத்தில் கா கருப்பான எனத்  தொடங்கும் பாடலில் வாலி எழுதிய வரிகள். [இவரே தான் இதே படத்தில் கல்லை கண்டால் கடவுள் இல்லை என்ற பாடலையும் எழுதியவர் என்பதையும்  நினைவில் கொள்ள வேண்டும்]


"ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறிக் கிடக்கு" இது வசூல் ராஜா படத்தில் சீனா தானா எனத் தொடங்கும் பாடலில் வைரமுத்து எழுதியது.

ஆராய்ச்சியில் இறங்கினால் இது போல் பல உதாரணங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்!

எனக்கு ஏன் இந்த வீபரித ஆசை என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு, இப்பொழுது கவிஞர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகி விடுகிறார்கள். நடிகன் ஆனால் முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறது அல்லவா. 
அட முதல்வர் பதவி இல்லை என்றாலும் மேலவை உறுப்பினர் பதவி கூடவா
  கிடைக்காமல் போய் விடும். அதுவும் இல்லாவிட்டால் இது போன்ற என் ஆராய்ச்சியை பார்த்து புல்லரித்துப் போய் எந்த பாடாவதி பல்கலைகழகமாவது எனக்கு முனைவர் பட்டம் கொடுக்காமலா போய் விடும்?

13 comments:

  1. Anonymous8:51 PM

    aio zeno..chaancela :)) me too was thinking on similar lines..iniki kalaila was thinking abt this after listening to two similar sounding songs :)

    ReplyDelete
  2. Anonymous8:53 PM

    ithey mathiri words oda origin pathi yosikarathu romba pudikum..."somaari" nu thitra word.."somberi" apdingara word oda maruvu :) intha mathiri kutti kutti aaraichi'sla romba ishatam :)

    ~gils

    ReplyDelete
  3. great minds think alike nu solvanga
    adhuku example idhu than ;)

    antha rendu similar song solli irundhu thesis paper submit panna kilambi irukulam ;)

    somberi to somaari araichiya nan varala intha vilayattuku enna enaku ketta vartha theriyadhu ;)

    ReplyDelete
  4. niice..

    சீக்கிரம் டாக்டர் ஆக வாழ்த்துகள்

    ReplyDelete
  5. கவலை வேண்டாம். இயலிசை நாடக மன்றத் தலைவர் பதவியாவது கிடைக்கும்.

    ReplyDelete
  6. Aha aha araichi yellam payankara involvementoda irukum polla. i like your thought on database really it will work will set of words..

    ReplyDelete
  7. உங்கள் கனவுகள் மெய்படட்டும், வருங்கால முதல்வர் அவர்களே!

    ReplyDelete
  8. நன்றி நன்றி :) :)

    ReplyDelete
  9. எங்கும் முதல்வர்.எதிலும் முதல்வர்.நீங்களும் முதல்வராக என் வாழ்த்துகள்

    ReplyDelete
  10. உங்கள் அழைபேசி எண் கிடைக்குமா?
    9894887705
    என் ஆய்வு சம்பந்தமாக பேச விருப்பம்
    வாலிதாசன்

    ReplyDelete
  11. உங்கள் அழைபேசி எண் கிடைக்குமா?
    9894887705
    என் ஆய்வு சம்பந்தமாக பேச விருப்பம்
    வாலிதாசன்

    ReplyDelete
  12. வாழ்த்துகள் நண்பரே....

    ReplyDelete