Monday, July 11, 2011

ஒடுங்க,ஒடுங்க அது வருது!

நினைவு தெரிந்த வரை, மொத்த குடும்பமும் சென்று வந்த முதல் கல்யாணம். இரு நாட்களும் நான் முழுக்கை சட்டை அணிந்திருந்தேன் என்பது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமாச்சாரங்களை ஆவணப்படுத்துவதையும் தாண்டி மிக  முக்கியமானது கற்ற பாடத்தை கல்வெட்டில் பொறித்து வைப்பது!

சிறுவனாய் இருந்த போது கல்யாணங்களில் பார்த்த பலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. சிலரை என்னால் அடையாளம் காண இயலவில்லை. பலரைக் காணவில்லை! காலச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது!

”யாரிது?”, ”ஞாபகம் இருக்கிறதா?”, ”என்னைத் தெரியுமா” என்று கேட்பவர்கள் எல்லாம் அப்பாவிகள் அப்பிராணிகள். நல்லவர்கள். அவர்களிடம் முடிந்த வரை பேசிக்கொண்டிருக்கவும்.

”அப்புறம் தம்பி நீங்க என்ன தான் பண்றீங்க” என்று கேள்விகள் வரவில்லையெனில் சமுதாயம் பண்பாடு என்ற ஒன்றை மறந்துக் கொண்டிருகிறதா என்ற ஆராய ஆரம்பிக்கலாம். இப்படி கேட்பவர்கள் சராசரிகள். சகித்துக் கொள்ளலாம்.

ஆனால் எல்லாவற்றையும் விட கடுப்பேற்றும் சமாச்சாரம், முதல் சந்திப்பில் நான்காம் கேள்வியாய் “எவ்வளவு வயசாகிறது?” என்று கேட்பவர்கள்.
நான் என்ன சினிமா நடிகையா? இல்லை இவர்கள் எல்லாம் சினிமா நிருபர்களா?
பி.கு
பின்லேடனை பாகிஸ்தானில் அமெரிக்கா கொன்றிருக்கலாம். ஆனால் சொந்தக்காரர்கள் என்ற போர்வையில் இருக்கும் சிலர் பின்லேடன்(லேடிகள்) மிக பயங்கரமானவர்கள். அவர்களிடமிருந்து நம்மை அமெரிக்கா என்ன ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது!

8 comments:

  1. உங்களுக்கு நல்லது பண்ணறவங்களை இப்படி சொல்லிப்புட்டீஹளே. அந்த பின் லேடீக்கள் எப்படியும் உங்களை சும்மா உட மாட்டாங்க. :-D

    ReplyDelete
  2. எவ்வளவு வயசாகிறது ? ? :)

    ReplyDelete
  3. Kalyanathula neenga enna pannindruntheengannu sollave illaiye?!!!!!!!!! Me wondering!!!!!!!

    ReplyDelete
  4. @Ram
    ஆமா ஆமா ரொம்ப நல்லவங்க :) பின்விளைவுகளை பின்னாடி பாத்துக்கலாம்.

    @Ramesh,
    ரொம்பக் கம்மி வயசுதான்.

    @CG
    Long time no see! How is P? There was nothing for me to do. Thanks to Android, Micromax,Airtel and 3G. I was fiddling my mobile. Ashte

    ReplyDelete
  5. Bachelor life- னாலே இதெல்லாம் ஜகஜம் தானே. வயச கேட்டா நீங்க wanted list- ல update ஆயிடீங்கனு அர்த்தம், உசார் ஆயிக்கோங்க...:)

    ReplyDelete
  6. @venkat நான் ஏன் உஷார் ஆகனும் ;)
    நம்மள பாத்து அவங்க இல்ல பயப்படணும் !

    ReplyDelete
  7. reply வதுடுச்சா... நான் கூட comment பண்ணதுல எதுனாச்சும் தப்பயிடுச்சோனு நினைச்சேன்.

    Wanted list- ன groom wanted list- ங்க, அங்க எல்லாம் terrora இருக்க புடாது அடகித்தான் போகணும்.

    ReplyDelete