Wednesday, November 14, 2007

Deepavali

காற்று மண்டலத்தை
கரி மண்டலமாக்கும் புகை

தலையை பிளக்கும்
காதை செவிடாக்கும் சத்தம்

நடக்க முடியாமல்
யாழ்ப்பாணமாகிப் போன தெருக்கள்

காந்தி தாத்தாவை
குப்பை கூளமாய் வீணாக்கி

துப்புரவு தொழிலாளியை
stretch செய்ய வைக்கும்

பட்டாசு பிசாசு
தேவையா விசுவரூபமாய் கேள்விகள்

வெடிக்காத வெடியாய்
புஸ்வாணமாய் காணாமல் போனது

சிவகாசி குழந்தைத்தொழிலாளி
மனதில் மின்னி மறைந்தபோது!

No comments:

Post a Comment