எல்லாம் நன்மைக்கே!
இதுவும் கடந்து போகும்.
எது நேற்று மற்றோருவனுடையதோ, அது இன்று உன்னுடையது, நாளை யாருடையதோ!
எதை கொண்டு வந்தாய் நீ? இழப்பதற்கு!
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
போனால் போகட்டும் போடா!
உன்னை சொல்லிக் குற்றமில்லை, என்னை சொல்லிக் குற்றமில்லை!
ஆண்டவன் கொடுக்கிறதை யாராலும் தடுக்க முடியாது. ஆண்டவன் தடுக்கிறதை யாராலும் கொடுக்க முடியாது.
ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும்.
சைக்கிளை விட்டு இறங்கினால் தானே பைக்கில் செல்ல முடியும்.
இருக்கும் மொபைல் தொலைந்தால் தானே புது மொபைல் வாங்க முடியும்.
நீங்கள் முழு மனதோடு ஒன்றை விரும்பினால் நீங்கள் அதை அடைய முழு உலகமும் ஒத்துழைக்கும். அப்படியும் அது உங்களுக்கு கிடைக்க வில்லையெனில் நீங்கள் அதை முழு மனதோடு விரும்பவில்லை என்பது தான் பொருள்.
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்!