ரஜினி, "I Can talk english walk english" என பேசுவது போல நான் ஹிந்தி பேச வேண்டும் என்று நெடுங்காலமாக ஓரு பெண்ணிற்கு விருப்பம். வேறு யாருமில்லை, என் அம்மா தான். தமிழ், கன்னடம், தெலுங்கு, என மூன்று திராவிட மொழிகள், மற்றும் ஆங்கிலம் என மொத்தம் நான்கு மொழிகளில் எனக்கு பரிச்சயம் இருந்தாலும்,தேசிய மொழி ஹிந்தி தெரியாமல் இருப்பது அவர்களுக்கு மிகப் பெரும் கவலை, குறை! மலையாளம் கற்றால், என் திராவிட மொழிகளின் பரிச்சயம் முழுமை பெறும் என ஏன் என் அம்மாவிற்கு தோன்றவில்லை.(எனக்கு தோன்றியிருக்கிறது :) )
நன்றாக ஆங்கிலம் பேச விரும்பும் என் நண்பர்கள் யாவருக்கும் நான் கொடுக்கும் அறிவுரை, ஆங்கில படங்களை பாருங்கள்.
ஊருக்கெல்லாம் உபதெசிப்பதை நாம் பின்பற்றினால் என்னவென்ற எண்ணம் சற்றே லேட்டாக என் மனதில் உதித்தது
தியேட்டர் சென்று, நான் ஹிந்தி படம் பார்ப்பது சின்னதம்பியில் கவுண்டமணி படம் பார்ப்பது போலத் தான்.
திருட்டு டிவிடி வாங்குவதில் விருப்பமில்லை.(மோசமான பிரிண்ட்டும், மோசர்பேயரும் காரணம்)
நெட்டில் டவுன்லோடு செய்தாலும் கவுண்டமணி கதைதான். சப் டைட்டில்கள் இருப்பதில்லை. டவுன்லோடு செய்ய பொறுமையும் இருப்பதில்லை. கனெக்க்ஷன் நம்மூரில் இன்னும் ஆமை வேகம் தான். (3G எப்ப ராசா வரும்?)
(நெட்டில் தமிழிசை, ஆங்கில படம், புத்தகங்கள் டவுன்லோடு செய்(த)வது இதில் சேராது)
பிற்காலத்தில் டிவிடி கடை வைக்கும் எண்ணம் எதும் இல்லாததாலும், செகண்ட் ஹாண்ட் டிவிடி மார்க்கெட் இல்லாததாலும், மோசர்பேயர் பங்குகள் வாங்காத காரணத்தினாலும், Big Flix-ல் ஐக்கியமாகி விட்டென். Big Flix,அமெரிக்க net flix-ன் இந்திய பிரதி.
Big Flix சேர்ந்த பின்னும் ஹாலிவுட் மோகத்தை குறைத்து பாலிவுட் பக்கம் வர ஒரு வார காலம் பிடித்தது.
அப்படி எடுத்த முதல் படம் மதூர் பண்டார்க்கர் எடுத்த Page-3 (அவரின் முதல் படமா எனத் தெரியவில்லை)
நம்மூரில் ஊர்ப்பெயர் வைத்து சிலர் படம் எடுப்பார்கள்.சிலர் ஊரை மையமாக வைத்து படம் பண்ணுவார்கள். அது போல டைரக்டர் மதூர் பண்டார்க்கர் உண்மைக்கு மிக அருகில் படம் எடுப்பவர்.
Corporate,Chandni bar, fashion ஆகியவை இவர் எடுத்த மற்ற சில படங்கள்.
பேக்ஷன் துறை நிஜமாகவே, இவர் எடுத்த பேக்ஷன் படம் போலத்தான் இருக்கும் என பேக்ஷன் துறையில் வேலைப் பார்க்கும் நண்பன் ஒருவன் அதிர வைத்தான். Page Three Celebrity யாரையும் எனக்குத் தெரியாது
இனி தினமும் பேப்பரில் மூன்றாம் பக்கத்தை பார்க்கும் போது எல்லாம் இந்த படம் நினைவுக்கு வரும்.
அடுத்த முறை ஊருக்கு போகும் போது அம்மாவிற்கு காட்ட இந்த படத்தை எடுத்துச் செல்ல வேண்டும். போட்டுக் காட்டிய பின், பின்னுரையாகச் சொல்ல வேண்டும். "அம்மா, நீ பார்த்தது சத்தியமாக ஹிந்தி படம் தான், அரைகுறையாக டப் செய்யப்பட்ட படம் அல்ல தமிழ் நாட்டில் தான் தமிழ் தெரியாமல் பிழைக்க முடியும் என்றல்ல, பம்பாயிலும் ஹிந்தி தெரியாமல் பிழைக்கலாம் ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு. கவலைப்படாதே அம்மா!"
பி.கு
படம் பார்த்து விட்டு மல்லாக்க படுத்து, அகலக்கால் விரித்து, விட்டத்தை பார்த்த போது உதித்த சிந்தனைகள்
பாம்பே மும்பை ஆகிவிட்டது, பாலி வுட் ஏன் மாலி வுட் ஆகவில்லை?
மஹாராஷ்டிரத்தில் மராட்டியர்கள் மட்டும் இருக்க வேண்டும் என போராடும் ராஜ் தாக்கரே, மஹாராஷ்டிரத்தில் ஹிந்தி படம் எடுக்க கூடாது என ஏன் போராடுவதில்லை?
No comments:
Post a Comment