Sunday, November 08, 2009

என் சுவாசக் காற்றே!

அரவிந்த்சாமி பார்ப்பதற்கு மட்டும் டாம் க்ரூஸ் அளவுக்கு இல்லாமல், அந்த ஆரம்ப ஸ்டண்ட் காட்சியையும் அவரைப் போலவே சிறப்பாகத்தான்
செய்துள்ளார்.ஆனால் அடுத்த நொடியே மொக்கையான தமிழ்சினிமா தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைவூட்டுகிறார்கள். அதை
கிளைமாக்ஸ் வரை விடாமல் சிறப்பாக மெயின்டெயின் செய்கிறார்கள்.கொலையில் இணையும் காதல் நம்மை கொன்றுவிடுகிறது.

இருந்தாலும் அந்த காதல் காட்சிகள் எல்லாம் கவிதை கவிதை.

கதை முடிச்சு எல்லாம் நன்றாக போடத்தான் முயற்சி செய்திருக்கிறார்கள்.ஆனால் நடுவே பிரகாஷ்ராஜ் காணாமல் போவது, தேவையில்லாத ஓட்டாத காமெடி பிட், என அவிழ்ப்பதில் திரைக்கதை சிக்கி சின்னாபின்னமாகி விட்டது.

ரகுமான் இசை, வைரமுத்து வாலி வரிகள் அருமையான ஒளிப்பதிவு, இனிமையான இஷா எல்லாம் வீணா போச்சே[என் தூக்கம் உட்பட]

பி.கு
1.படத்தில் வரும் அரவிந்த்சாமி வீடு போல வாங்கவோ கட்டவோ முடியவில்லையென்றாலும் வாடகைக்காவது நான்கு மாசம் இருக்க வேண்டும்.

2.மழையில் BigFlix-ல் சென்று வாங்கி வந்த இந்த டிவிடியை எங்கு வைத்தேன் எனத் தெரியாமல், Hot Chips-க்கும் வீட்டிற்கும் அலைந்து போதே சகுனம் சரியில்லை என்று உஷாராகியிருக்க வேண்டும். விதி யாரை விட்டது.அதுமட்டுமல்லாமல், லேசாக ஜுரம் வந்தது போல ஒரு பீலிங். ஆமாம் இஷாவை இவ்வளவு நனைய விட்டிருக்கிறார்களே, பாவம் அவங்களுக்கும் ஜுரம் வந்திருக்குமோ?

இப்படிக்கு(இப்போதைக்கு) இஷா பீவரில்
zeno

2 comments:

RamNarayanS said...

Isha is getting married end of Nov to some restauranteur. :) முக்கியமான விஷயம் உனக்கு for your இஷா ஜுரம் to go.

Appu said...

enna koduma sir edhu
isha poche!