ஒரு நாளின் 12% (தோரயமாக) நேரத்தை 60 KM பேருந்தில் பயணம் செய்து விரயம் செய்பவன்.
அதை உபயோகமாக கழிக்க இரு வழிகள்.
ஒன்று புத்தகம் படிக்கலாம்.
சாதாரணமாகவே பேருந்தில் படித்தால் "Varying focal length more strain to eyes". நான் பயணம் செய்யும் சாலையின் மேடு பள்ளங்களுக்கு சொல்லவே வேண்டாம். மேலும் மீதி 80 % நேரத்தை இது போல் கணினியைப் பார்த்து கண்களை கெடுத்துக் கொண்டிருப்பவன்.இன்னும் கண்ணாடி போடாமல் இருப்பதற்கு காரணம் அவ்வப்போது கண்ணை குளிர்ச்சி படுத்துவதானால் தான். படுக்க போகுமுன் வெள்ளரி வைத்து தூங்கி. நீங்கள் வேறு ஏதாவது நினைத்திருந்தால் Surf Excel உபயோகிக்கவும்.
இந்த ஞான அறிவு எல்லாம் கிடைத்ததே இரண்டாவது வழியை பின்பற்றிய போது தான்!அதாவது தூங்க முற்பட்ட போது.
அந்த பரவச பேரானந்த பெருநிலையை அடைய எத்தனை சோதனைகள்!
எங்கும் எப்போதும் எப்படியும் படுத்து உறங்குவது என்பது புலிகள் போல கொஞ்சம் கொஞ்சமாக என்னில் அருகி வந்துக் கொண்டிருக்கும் குணம்.
இதை சற்றும் புரிந்துக் கொள்ளாமல் பாடுகிறேன் என்ற பெயரில் பிதற்றிக் கொண்டிருப்பவன் ஒரு பக்கம்.[ஒரு நாள் இறங்கும் போது சில்லறைக் காசு போட்டால் இவன் சரி ஆகி விடுவான்] MBA வையும் Matrimonial சமாசாரத்தையும் ஒரே மூச்சில் அலசும் பெண்கள். இவர்களை நிச்சயமாக பொறுத்துக் கொள்ளலாம் [வேண்டும்] ஏனெனில் மேற்கூறிய. அரிய அறிவுச் செய்தி எல்லாம் சொன்னவர்கள் இவர்களே!
ஆனால் இந்த அலைபேசியில் அலப்பறை விடுபவர்களிடமிருந்து எனக்கு பரம பிதா என்று மோட்சம் வாங்கித் தருவார் என்று யாராவது Nostradamas யை கேட்டு சொல்லுங்கள்.
மேனேஜரிடம் திட்டு வாங்குவது என்ன! அவரை திட்டுவது என்ன?
Trouble shoot செய்வது என்ன? Onsite சப்போர்ட் கொடுப்பது என்ன?
அப்பா கிளம்பிட்டேன், வந்து பிக் பண்ணிக்கோ என்று சொல்லி விட்டு, என்னடா பண்றே, பிஸியா இருக்கியா என்று அடுத்த நிமிடம் கடலையை தொடர்வது என்ன?
இவர்களை திருத்த முடியாது. திருந்தவும் கூடாது என்று எம்பெருமானை வேண்டிக் கொண்டு செல்போன் கம்பெனிகளின் பங்குகளை வாங்கி போடுவோம்.
இப்படி எல்லாம் நான் எழுதக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் நான் நினைக்கும் போது எல்லாம் நித்திரா தேவி என்னை அணைக்க வேண்டும் என்று உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள்!
3 comments:
Humo'ரவுசு'. :-) :-)
//அவ்வப்போது கண்ணை குளிர்ச்சி படுத்துவதானால் தான். படுக்க போகுமுன் வெள்ளரி வைத்து தூங்கி. நீங்கள் வேறு ஏதாவது நினைத்திருந்தால் Surf Excel உபயோகிக்கவும்.
சொல்லாம சொல்லிட்டியே zeno, சொல்லிட்டியே. :-) :-)
மிக்க நன்றி. ஆமா சொல்லாட்டி யாருக்கும் தெரியாதா என்ன? நான் தான் ஒரு திறந்த புத்தகம் ஆச்சே! :)
Post a Comment