Tuesday, May 25, 2010

தசாவதாரம்-சிறு குறிப்பு

 தசாவதாரத்தை பெருந்திரையில் தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து படத்தை எடுக்கும் முன்னர் கடைசி நாள் கடைசி காட்சியை, படத்தை முன்னரே பார்த்தவர்களை இழுத்துச் சென்று  பார்த்த பொழுது அப்பாடா எடுத்த முடிவின் படி  பார்த்தாகி விட்டது என்ற எண்ணத்தை தவிர வேறு எதுவும் மேலோங்கி நிற்கவில்லை.

குளிர்பதன பேருந்தில் தெளிவான தியேட்டர் பிரிண்டில் பாஸ்ட் பார்வர்ட் ஏதும் இன்றி பார்த்த பொழுது சில பல பூதாகர சிந்தனைகள்.

அசின் என்ற ஒரு நல்ல நடிகையை காவல்காரன் மூலம் மீண்டும் தமிழுக்கு கொண்டு வரும் எங்கள் தலைவர் விஜய் வாழ்க!

பின்னணி இசை ஆகட்டும் பாடல்கள் ஆகட்டும் எல்லாம் பிரமாதம் எனத் தோன்றியது.

இப்படி படத்தில் இருக்கும் மற்ற(மல்லிகா ஷெராவத்)  சமாச்சாரங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியாமல் மனதில் நிற்காமல் அனைத்தையும் சுனாமி போல் விழுங்குவது கமல்!

கமல் ஒரு ரகசிய வைணவ ஆத்திகரோ என்ற சந்தேகப் பேய் மனதில் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

அவருக்கு இந்த படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கு என விருது வழங்கியது மிகப் பொருத்தம்.

கமலின் நடிப்புக்கு நிகர் அவரே[ அமெரிக்க காட்பாதர் பார்த்து விட்டு பழைய நாயகன் பார்க்கும் போது, பழைய படங்களில் ரஜினியின் நடிப்பை பார்க்கும் போது என சில சமயங்களில் கமலுக்கு  வழங்கப்படும் பாராட்டு அதிகமோ எனத் தோன்றியது உண்டு]

கமல் ஒரு சிறந்த வசனகர்த்தா. ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். பின்னி இருக்கிறார். நக்கல் நையாண்டி எல்லாம் துள்ளி விளையாடுகின்றன.புத்திசாலித்தனம் மிளிர்கிறது. உதாரணத்திற்கு எதை விட எதை சொல்ல என்று யோசித்தால் படத்தின் வசனங்கள் அனைத்தையும் தான்  சொல்லவேண்டும்.

 தவறுகள் துருத்திக் கொண்டு தெரியாத திரைக்கதையும் கூட!

இவ்வாறு கொடுத்த காசுக்கு மேலாக பல சிறப்பம்சங்கள்    கூவுகின்றன.

ஜெயப்ரதாவை ஆட வைத்து நம்மை எல்லாம் கொடுமை படுத்தியதை கூட பொறுத்துக் கொள்ளலாம். [ஹேமமாலினி ஆடி இருந்தால் ஒரு வேலை கொண்டாடி இருக்கலாம்] ஆனால் தேவை இல்லாவிட்டாலும் திரைக்கதையை டிங்கரிங் பார்த்து பத்து வேடங்களில் நடித்து என் நடிப்புத் திறமையை நிரூபிப்பேன்,
 "கேயாஸ் தியரியை பாமரனுக்கு விளக்கி என் புத்திசாலிதனத்தை காட்டுவேன்  என கங்கணம் கட்டி இறங்கி, மேலும் சிறப்பாக விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டிய  படத்தைத்  தராமல் இரசிகனை முட்டாளாக்கியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை!

6 comments:

Anonymous said...

???dasavatharam tvla poata pala kaalam aaguthu..athuku ipo oru posta?!!!!! rombbbaaa seekrama padam pathuteenga :D

Appu said...

nan theatre la pathapa romba feel agala. but watchin in bus made me think! you see no tv at home and i dont watch much of tv ;)

RamNarayanS said...

Kamal's maedhaavithanam (harsh word, but I can't find a softer one) comes in most of his movies. Maybe 5 avataaram should have been more than enough.

But nothing to beat the original TR.

Appu said...

I think, you are complimenting TR. I felt TR did justice to all the roles he played most of the times.

RamNarayanS said...

Yep. TR was an ashtaavadhaani, but he was the epitome of exaggeration as well.

Appu said...

what fun would it be to watch TR wit out his theatrical exaggerations?