பெரும்பாலும் படங்கள் பார்க்கும் போது, பேக் கிரவுண்ட்டில் போட்டு விட்டு, வசனம் மட்டும் கேட்டுக் கொண்டு, வேறு வேலை செய்வது தான் வழக்கம்..
அப்படித்தான் இந்த கிக் படமும். தமிழில் தில்லாலங்கடி என வந்தப் படம் தான். சக அறைவாசிகள் அறையில் அலற விட்ட போது பார்க்க நேர்ந்தது. போலி சரக்கை விட ஒரிஜினலில் தான் கிக் அதிகம் என அரையும் குறையுமாக தமிழில் பார்த்ததை தெலுங்கில் ஆசை தீர பார்க்க முடிவு செய்தேன்.[அதுவும் பாலகிருஷ்ணா நடித்த சமரஸிம்ஹ ரெட்டி போன்ற படங்களைப் பார்த்தால் நிச்சயம் கிக் ப்ராப்திரஸ்து]
படத்தை ஓட விட்டு வேறு ஏதோ நோண்டிக் கொண்டிருக்க என்னடா ஏதும் சத்தம் வராமல் இருக்கிறது அதுவும் தெலுங்கு சினிமாவில் ஆரம்பத்தில் அமைதியா என அதிர்ச்சியான ஆச்சரியம் ! ஹீரோவுக்கு இப்படி ஒரு ஓபனிங்கா எனப் பார்த்தால் அது ஹீரோயினின் ஓபனிங். இலியானா யோகா செய்வதைப் பார்த்தால் நமக்கு மன அமைதி கெட்டு விடுகிறது.[கடைசியில் பேர் போடும் போது கூட மீண்டும் இலியானா யோகா செய்வதை காட்டுகிறார்கள், சில்பாவிற்கு போட்டி ரெடி] தமிழ் 3 இடியட்ஸிற்கு அவருக்கு ஏன் 1.5 கோடி என இதைப் பார்த்தால் புரியலாம். தெலுங்கு போக்கிரியில் பார்த்திருந்தாலும் இதில் பல மடங்கு பளிச்சிட்டது போல் பட்டது.
இரவி தேஜா! கல்லூரியில் முதன் முதலாக இவர் நடித்த இடியட் படத்தை பார்த்த போதிலிருந்ந்தே அவர் நடிப்பின் மீது ஒரு பிடிப்பு. அதுவும் அந்த படம் தான் தமிழில் சிம்பு நடித்த தம் என தெரிந்தவுடன் ரவி தேஜாவின் நடிப்பின் மீது அபார மதிப்பு! இதிலும் பட்டையைக் கிளப்புகிறார்.
இரண்டிலும் ஷ்யாமுக்கு ஒரே கதாப் பாத்திரம்.கனகச்சிதம்.தமிழில் தமன்னா, சந்தானம், லிவிங்சடன், பிரபு, சுஹாசினி ஆகியோர் தெலுங்கை விட சிறப்பாகச் செய்திருக்கின்றனர். வடிவேலு உட்பட மற்றவர்கள் எல்லாம் வெத்து தான்.
காமெடிக் காட்சிகளுக்கு தமிழில் மெருகூட்டியவர்கள் திரைக்கதையிலும் மெனக்கெட்டியிருக்கலாம். கதாநாயகனின் இரண்டு முகங்களும்[காதலன், கள்வன்] ஓன்றன் பின் ஓன்றாக காட்டியிருப்பதை தமிழில் மாற்றி மாற்றி காட்டி விறுவிறுப்பு காட்டியிருக்கலாம்
பெரும்பாலான தெலுங்கு படங்கள் தமிழ் நடிகர்களுக்குப் பொருந்துவதில்லை.அதுவும் அப்படியே காட்சிக்கு காட்சி காப்பியடிக்கும் போது! .ஒரே மாதிரி ஒலிக்கும் சில வார்த்தைகள் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பொருள் படும். படங்களும் அப்படித்தான். பெரும்பாலான படங்கள் தெலுங்கில் பார்க்கும் போது திவ்யமாகவும் தமிழில் திராபையாகவும் இருக்கிறது.
2 comments:
உங்க தெலுங்குபடபற்று இவ்வளவு இருக்கும்னு எதிர் பாக்கலை. பேஷ் பேஷ்! படம் படமா பாத்து தள்ளரீங்க.
ஆமா, உங்க இஷ்ட நாயகி அனுஷ்காவையும் இலியானாவையும் compare பண்ணல? (மன அமைதி கெட்டு போச்சோ?) :-D
இன்னும் நிறைய பற்று இருக்கு அப்ப அப்ப பத்திகிட்டு வரும். பயப்படாதீங்க!
In fact the rate of movie watching has considerably come down.
Can't compare Both of them. They both are legends in their own right :D
Post a Comment