ரொம்ப காலமாகவே படங்களை நியாயமான முறையில் தான் பார்த்து வருகிறேன். MoserBaer-ம் Big Flix-ம் தான் காரணம்.Pirated DVD களின் தரமும், Online Download Speed-ம் மற்ற துணைக் காரணங்கள்.
சில நாட்களாய் புத்தகங்களிலும் இதே நிலைமை. எல்லாம் காசுக்கடக்கமான புத்தகங்கள். அடங்க வில்லையெனில் ஒழுங்காக வாங்கியவர்களிடமிருந்து ஒசி வாங்குகிறேன். அனாயசமாக Online-ல் படிக்க முடிந்தாலும் கண்களை கருத்தில் வைத்து Avoid செய்து விடுகிறேன்.
என்னை மாதிரி ஜீவன்களுக்காகவே LandMark-ல் தமிழ் ஆங்கிலம் என வித்தியாசம் இல்லாமல், எவ்வளவு குறைவான காசுக்கு வாங்கினாலும், Free Shipping மற்றும் Discount உடன் Online-ல் புத்தகம் விற்கிறார்கள், அருமையான Packing, சரியான Delivery உடன்.[இதற்கு முன் ஒரு புத்தகத்தை 58-கு வாங்கினேன்]
Site-ல் Filterகள் எல்லாம் போட்டு,தேடுவதற்கு மேலும் வசதி செய்யலாம். இவர்கள் தரும் போது கிழக்கில் ஏன் தருவதில்லை?
எங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஒரு கடையில் 20% தள்ளுபடி இருந்தும், கேட்ட புத்தகங்கள் மெயின் கடையில் இருந்து தருவிக்கிறோம் என்று சொல்லி டபாய்த்ததால், மீண்டும் LandMark Site-ல் Land ஆனேன்.
இதற்கு இவ்வளவு அறிமுகம் என்றால், குறுந்தொகை ஒரு எளிய அறிமுகம் என்ற புத்தகத்தை வாங்கி படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை சொல்லத்தான். :) :)
சுஜாதா எழுத்தைப்ற்றி புதிதாக பிரஸ்தாபிக்க எதுவுமில்லை.
ஆரம்ப பக்கங்களே ஆபாரம் தான், ஆனால் மூன்று பக்கங்கள் தாண்டும் முன்னரே மூச்சு மூட்டுகிறது. கனமான சாரம் தான் காரணம். புத்தகமும் Hard Binding இல்லாமல் PaperBack இருந்திருக்கலாம்.
பாடல்களை விளக்கம் இல்லாமல் படித்தால் ஓன்றும் விளங்குவதில்லை.
சங்க கால தமிழுக்கும் சமகால தமிழுக்கும் கால இடைவெளி பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், மனிதனின் அகப் பொருள் வாழ்வில் அன்றும் இன்றும் அதே பிரச்னைகள் தான்!
No comments:
Post a Comment