Saturday, December 19, 2009

நீ வருவாய் என

எப்போது எப்படி என்று தெரியவில்லை அவளை எனக்கு பிடித்து விட்டது. அவளுக்கும் என்னை  பிடிக்கும்  என்று  தான்  தோன்றியது ஆனால்  அரண்டவன்  கண்ணுக்கு  இருண்டது எல்லாம்  பேய் என்பது போல் அது என் பிரமையா எனவும் தோன்றியது. 
தினமும் அலுவலகத்தில் பார்த்து கண்ட கதைகள் பேசினாலும் ஏனோ இதைக் கேட்க மட்டும் வாய் வரவில்லை.
விஜய் தான் உதவிக்கு வந்தார். 
உனக்கு என்னை பிடிக்கும் என்றால் அவதார் படத்திற்கு டிக்கெட் அனுப்பு இல்லையென்றால் வேட்டைக்காரன் படத்திற்கு டிக்கெட் அனுப்பு என்று வந்த   குறுந்தகவலை அந்த இரவுஅனுப்பி வைத்தேன். சாதா பார்வர்ட் என்று நினைக்க கூடாது என , "அவதாரா வேட்டைகாரனா என்று நன்றாக யோசித்து பதில் சொல்லு என்று மேலும் ஒரு குறுந்தகவலை அனுப்பி வைத்தேன்.
நாளை நேரில் என்று பதில் வந்தவுடன் எனக்கு புரிந்தது அவளுக்கு புரிந்து விட்டது என.
ஆவலுடன் அலுவலகம் அடைந்த என் கையில் வேட்டைக்காரன் டிக்கெட்டை தந்தாள்.இரண்டு இருந்தது.
 பின்குறிப்பு
இதன் Sub Text புரியாதவர்களுக்காக இந்த வரி.
உன்னோடு என்றால் வேட்டைக்காரன் படத்துக்கும் வரத்தயாராக இருக்கிறேன் என்று அவள் சொல்லிக்  கொண்டிருந்த  போது நான் பறந்து கொண்டிருந்தேன்.

5 comments:

RamNarayanS said...

Oye, Vettaikkaaranai otturadhe unakku sariyaa irukkudhu.

Eppadiyellaam kelambittaangayya. indha naattula :-)

Anyway pogura pokkai paaththa, nee Vijayoda ellaa recent padangalaiyellaam rasichchu paakka vaendiya stageukku poyiruvainnu nenaikkaraen. :-)

Appu said...

நான் குருவி , வில்லு, ஆதி எல்லாம் பார்த்தாச்சு. இதை First day First show பார்க்க முடியாம போச்சேனு செம பீலிங். :(

கதை நல்லாருக்கானு சொல்லுங்க :):)

RamNarayanS said...

55er last line twist மாதிரி இருக்கு. :-) Good one. (Maybe it is a new form of "pick-up" line) ;-)

என்னோட சாபம் பலிக்க ஆரம்பிச்சுடுச்சா என்ன? :-) :-)

Appu said...

நாங்க எல்லாம் பெரிய விஜய் Fan. Only yesterday saw, big flix has his whole collection from his initial days. why not watch all nu thinking :) :)

பத்மா said...

nice ramblings keep it up
padma