பாலிடிக்ஸ் பத்தி எல்லாம் இந்த பால் மணம் மாறா பாலகனுக்கு[நான் தான் அது] எல்லாம் என்ன தெரியும் என்று எண்ணிக் கொண்டு இவ்வளவு நாள் அரசியல் அசிங்கத்தைப் பற்றி எழுதியதில்லை.
ஆனா தெருமுக்கு டீக் கடையில டீ குடிக்கும் தமிழன் மற்றும் இந்திய அரசாங்கத்தால தப்பாக அச்சிடப்பட்ட வாக்காள அடையாள் அட்டை இருக்கும் காரணத்தாலும் சமூக பொறுப்பின் காரணத்தினாலும் இதோ அரசியல் ஆரம்பம்.
விஜயகாந்த் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறார் என்றவுடன், அவர் முதல்வர் ஆனால் நிச்சயம் தமிழ்நாட்டைக் காலி செய்து விட்டு தெலுங்கு நாட்டிற்கோ அல்லது கன்னட நாட்டிற்கு குடிப் போய் விடுவேன் என்றெல்லாம் சொன்னதுண்டு.
பகல் கொள்ளைகளைக் கண்டு கலங்கி விஜய்காந்த் வந்தால் தான் என்ன? நிச்சயம் நல்ல மாற்று தான் என்றெல்லாம் வீபரிதமான எண்ணமெல்லாம் விளைய ஆரம்பித்தது!
இந்த தேர்தலில் மூன்றாவது அணி அமைத்திருந்தால் முதல்வர் பதவி மிஸ்ஸாகியிருக்காது என்றெல்லாம் சிந்தனை சிறகடித்தது.
வடிவேலுவின் அரைவேக்காட்டுப் பேச்சைக் கேட்டபின் இவ்வளவு தானா திமுகவின் டக்கு. எப்படி இருந்த இவர்கள் இப்படி ஆகிவிட்டார்களே இதற்காகவாவது விஜய்காந்த வெல்ல வேண்டும் என்று விரும்பினேன்.படங்களில் காலை சுழட்டி சுழட்டி அடிக்கும் கேப்டன் நிஜத்தில் கையை சுழட்டி சுழட்டி தன்
சொந்தக் கட்சி வேட்பாளரை அடித்தது வடிவேலு சொல்வது போல அவமானம்,அசிங்கம். அது மட்டுமல்ல, அடிவாங்கிய வேட்பாளரை விட அடிச்ச கேப்டனுக்குத் தான் டேமேஜ் அதிகம்.
என்னாது அடியா எங்கு எப்போது அப்படி எல்லாம் நடக்கவில்லை என்று வேட்பாளர் மறுக்க மறுபடி மறுபடி கடுப்பேற்றும் விதமாக மிகவும் கேவலமாக அடித்ததில் என்ன தவறு எனக் கேட்கும் கேப்டனை எதால் அடிப்பது?
ஒன்று மட்டும் நிச்சயம், இன்னுமா உலகம் உங்களை மதிக்கும் கேப்டன்?
இப்படிக்கு நரசிம்மாவை பார்க்க முடியாமல் விருதகிரியை விரும்பி பார்த்த, கேப்டனின் உண்மை ரசிகன்! ;)
4 comments:
Balakan ????????
TN is cursed as long as movie stars are seen as credible politicians. There is a real crisis of political talent - but then who cares as long as free colour TVs, laptops and the like rain on.
not just பாலகன்!பால் மணம் மாறா பாலகன் ;)So true, there is a crisis. Hmm may be i should give a shot at politics at some point in my life. no kidding!
கேப்டனின் உண்மை ரசிகனுக்கு இப்படி ஒரு சோதனையா! Agree what you say. Gabdun made a mistake and he has also aggravated it with his behavior. Look at the way the political wars are being fought in the media. ஒட்டு போட ஊருக்கு போகலையா?
இல்லியா பின்ன :( no me not going :( He is doing only mistakes!
Post a Comment