தசாவதாரத்தை பெருந்திரையில் தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து படத்தை எடுக்கும் முன்னர் கடைசி நாள் கடைசி காட்சியை, படத்தை முன்னரே பார்த்தவர்களை இழுத்துச் சென்று பார்த்த பொழுது அப்பாடா எடுத்த முடிவின் படி பார்த்தாகி விட்டது என்ற எண்ணத்தை தவிர வேறு எதுவும் மேலோங்கி நிற்கவில்லை.
குளிர்பதன பேருந்தில் தெளிவான தியேட்டர் பிரிண்டில் பாஸ்ட் பார்வர்ட் ஏதும் இன்றி பார்த்த பொழுது சில பல பூதாகர சிந்தனைகள்.
அசின் என்ற ஒரு நல்ல நடிகையை காவல்காரன் மூலம் மீண்டும் தமிழுக்கு கொண்டு வரும் எங்கள் தலைவர் விஜய் வாழ்க!
பின்னணி இசை ஆகட்டும் பாடல்கள் ஆகட்டும் எல்லாம் பிரமாதம் எனத் தோன்றியது.
இப்படி படத்தில் இருக்கும் மற்ற(மல்லிகா ஷெராவத்) சமாச்சாரங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியாமல் மனதில் நிற்காமல் அனைத்தையும் சுனாமி போல் விழுங்குவது கமல்!
கமல் ஒரு ரகசிய வைணவ ஆத்திகரோ என்ற சந்தேகப் பேய் மனதில் தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
அவருக்கு இந்த படத்திற்கு சிறந்த நகைச்சுவைக்கு என விருது வழங்கியது மிகப் பொருத்தம்.
கமலின் நடிப்புக்கு நிகர் அவரே[ அமெரிக்க காட்பாதர் பார்த்து விட்டு பழைய நாயகன் பார்க்கும் போது, பழைய படங்களில் ரஜினியின் நடிப்பை பார்க்கும் போது என சில சமயங்களில் கமலுக்கு வழங்கப்படும் பாராட்டு அதிகமோ எனத் தோன்றியது உண்டு]
கமல் ஒரு சிறந்த வசனகர்த்தா. ஒவ்வொரு வார்த்தையையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார். பின்னி இருக்கிறார். நக்கல் நையாண்டி எல்லாம் துள்ளி விளையாடுகின்றன.புத்திசாலித்தனம் மிளிர்கிறது. உதாரணத்திற்கு எதை விட எதை சொல்ல என்று யோசித்தால் படத்தின் வசனங்கள் அனைத்தையும் தான் சொல்லவேண்டும்.
தவறுகள் துருத்திக் கொண்டு தெரியாத திரைக்கதையும் கூட!
இவ்வாறு கொடுத்த காசுக்கு மேலாக பல சிறப்பம்சங்கள் கூவுகின்றன.
ஜெயப்ரதாவை ஆட வைத்து நம்மை எல்லாம் கொடுமை படுத்தியதை கூட பொறுத்துக் கொள்ளலாம். [ஹேமமாலினி ஆடி இருந்தால் ஒரு வேலை கொண்டாடி இருக்கலாம்] ஆனால் தேவை இல்லாவிட்டாலும் திரைக்கதையை டிங்கரிங் பார்த்து பத்து வேடங்களில் நடித்து என் நடிப்புத் திறமையை நிரூபிப்பேன்,
"கேயாஸ் தியரியை பாமரனுக்கு விளக்கி என் புத்திசாலிதனத்தை காட்டுவேன் என கங்கணம் கட்டி இறங்கி, மேலும் சிறப்பாக விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டிய படத்தைத் தராமல் இரசிகனை முட்டாளாக்கியதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை!
Tuesday, May 25, 2010
Monday, May 24, 2010
கல்யாண வைபோகமே!
அவர்களின் அப்பாஅம்மா
கல்யாணத்தை கண்டுகளித்தனர்
பெற்றெடுத்த பிள்ளைகள்
அதிசய கல்யாணமல்ல
அயல்நாட்டு கல்யாணமுமல்ல
அறுபதாம் கல்யாணம்!
கல்யாணத்தை கண்டுகளித்தனர்
பெற்றெடுத்த பிள்ளைகள்
அதிசய கல்யாணமல்ல
அயல்நாட்டு கல்யாணமுமல்ல
அறுபதாம் கல்யாணம்!
தமிழ் திரைப்பட பாடல்கள் எழுதுவது எப்படி?
மிகப் பிரபலமான தமிழ் திரைப்பட பாடல்கள் எழுத வேண்டும் என்பது என் ரகசியக் கனவு லட்சியங்களில் ஒன்று. அதுவும் குறிப்பாக காதல் பாடல்கள்!
தினசரிகளில் கட்டுரை எழுதிய காலங்களில் கவிதை எழுதுவது குதிரைக் கொம்பு, மிகுந்த கற்பனா சக்தி வேண்டும், நேரடி அனுபவம் வேண்டும் என்றெல்லாம் பலவாறாக எண்ணியது உண்டு. என்னால் எழுதவே முடியாது என்றெல்லாம் கூட பயந்தது உண்டு. முதன் முதலாக கிறுக்கிய போது[அது ஒரு ஒப்பாரியாக இருந்தா போதிலும்] அடைந்த ஆனந்தத்துக்கு எல்லையே இல்லை.
வேற்று மொழிக்காரர்கள் தமிழில் பாடுவது என்பது அவ்வளவு கஷ்டமான காரியம் இல்லை. தமிழ் பாடல்களில் ஒரு சில[ஆயிரம்] குறிப்பிட்ட வார்த்தைகள் தான் மறுபடி மறுபடி வரும் என்னும் பொருள் படுமாறு ஹரிஹரன் ஒரு பேட்டியில் சொன்னதை படித்ததாக நினைவு! அப்படி என்றால் எழுதுவதற்கும் ஒரு சில வார்த்தைகள் தெரிந்து இருந்தால் போதுமல்லவா? [இல்லை பாடல் எழுத சில குறிப்பிட்ட ஆயிரம் வார்த்தைகள் தெரிந்து இருந்தால் போதும் என்று வேறு எங்கேயாவது படித்தேனா என்று குழப்பமாய் உள்ளது].
சொந்த கருத்தோ சுட்ட கருத்தோ சற்று யோசித்து பார்த்தால் இது உண்மை என்று தான் தோன்றியது! சங்க கால குறுந்தொகை பாடல்களின் கருப் பொருளும் உவமைகளும் இன்றைய நிலைமைக்கும்
பொருத்தமாய் உள்ளது. அதற்காக பாடல்கள் எழுத இதை எல்லாம் கஷ்டப்பட்டோ இஷ்டப்பட்டோ படிக்க வேண்டிய அவசியமில்லை.
ஏதேனும் டேட்டா பேசில் ஆயிரம் தமிழ் பாடல்களின் வரிகளை ஏற்றவும். எந்த வார்த்தைகள் எல்லாம் அதிகம் பயன் படுத்த படுகின்றன, அந்த வார்த்தைகளை எல்லாம் வேறு வார்த்தைகள் மூலமாக சொல்ல முடியுமா, எந்த சந்தர்பத்தில் எவ்வாறு பயன் படுத்த படுகின்றன என்று எல்லாம் பார்த்து வைத்து கொள்ளவும். இதை ஒருவாறு செம்மை படுத்தினால் நீங்களும் அடுத்த கவி குறு நில மன்னர் நீங்கள் தான்!
நம்ப முடிய வில்லையா?
"உடையென எடுத்து எனை உடுத்து" இது பல வருடங்களுக்கு முன்னர் காதலர் தினம் என்னும் படத்தில் ரோஜா ரோஜா எனத் தொடங்கும் பாடலில் வாலி எழுதிய வரிகள்
"உடை களைவீரோ உடல் அணிவீரோ" இது இப்பொழுது ராவணனில் கள்வரே எனத் தொடங்கும் பாடலில் வைரமுத்து எழுதியது.
"ஒழுக்கங்கள் என்பது ஊர்களை பொருத்தது"இது தசாவதாரம் படத்தில் கா கருப்பான எனத் தொடங்கும் பாடலில் வாலி எழுதிய வரிகள். [இவரே தான் இதே படத்தில் கல்லை கண்டால் கடவுள் இல்லை என்ற பாடலையும் எழுதியவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்]
"ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறிக் கிடக்கு" இது வசூல் ராஜா படத்தில் சீனா தானா எனத் தொடங்கும் பாடலில் வைரமுத்து எழுதியது.
ஆராய்ச்சியில் இறங்கினால் இது போல் பல உதாரணங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்!
எனக்கு ஏன் இந்த வீபரித ஆசை என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களுக்கு, இப்பொழுது கவிஞர்கள் எல்லாம் நடிகர்கள் ஆகி விடுகிறார்கள். நடிகன் ஆனால் முதல்வர் ஆக வாய்ப்பு இருக்கிறது அல்லவா.
அட முதல்வர் பதவி இல்லை என்றாலும் மேலவை உறுப்பினர் பதவி கூடவா
கிடைக்காமல் போய் விடும். அதுவும் இல்லாவிட்டால் இது போன்ற என் ஆராய்ச்சியை பார்த்து புல்லரித்துப் போய் எந்த பாடாவதி பல்கலைகழகமாவது எனக்கு முனைவர் பட்டம் கொடுக்காமலா போய் விடும்?

Wednesday, May 19, 2010
குடைக்குள் மழை
ஒற்றைக் குடையில்
அவனும் அவளும்
குடைக்குள் மழை
ஒன்றாய் இருந்ததாலல்ல
ஓட்டையாய் இருந்ததால்!
அவனும் அவளும்
குடைக்குள் மழை
ஒன்றாய் இருந்ததாலல்ல
ஓட்டையாய் இருந்ததால்!
Monday, May 10, 2010
Friday, May 07, 2010
Hospital Diaries
Recently, happened to visit one of the hospital rooms. There was a sign as follows:
"The management of hospital XYZ warmly welcomes you. We wish you a speedy recovery blah blah..."
You welcome a patient???
One more sign near the dustbins. They had different colored dustbins for different wastes.
Black for Food waste. E.g listed some blah blah.
Yellow for Chemo hazards. E.g listed syringes. Tablet covers etc..
Red for Bio hazards. E.g listed BODY PARTS.
Something tells me that Hippocratic oath would be the most violated oath in the world.
P.S
No wonder these morons awakened the deadly fighting streak in me that lurks out every now and then!
I should consider investing in hospital stocks.

Wednesday, May 05, 2010
உலகத்த நினைச்சேன் சிரிச்சேன்
செந்தில் :ha ha Oh my God
கவுண்டமணி: என்னடா சிரிச்சிட்டே வர்றே
செந்தில்: நம்ம ஊர நெனச்சேன் சிரிச்சேன்னே,நம்ம ஊர் ரொம்ப கெட்டு போச்சுன்னே
கவுண்டமணி:அப்படி நல்லதா பேசி பழகுடா, அடை தலையா
செந்தில்:கையில Spanner பிடிச்சவன் எல்லாம் Mechanic ன்னு சொல்றான்னே. [இதை செந்தில் சொல்லும் பொழுது கவுண்டமணி கையில் spanner இருக்கும், Mechanic என்று போர்டு மாட்டி இருக்கும்]
முழு வீடியோ இங்கே பார்க்கலாம்
அதே மாதிரி நானும் நினைச்சேன் :P :D
கருப்பு கோட் மாட்னவன் எல்லாம் வக்கீல்னு சொல்றான்.
வெள்ளை கோட் மாட்னவன் எல்லாம் டாக்டர்னு சொல்றான்.
நாலு வருஷம் இன்ஜினியரிங் காலேஜ்ல தங்கி இருந்தவன் எல்லாம் எஞ்சினீயர்னு சொல்றான்.
அட இது பரவாயில்ல MS Project ஓபன் பண்ணி வச்சி இருக்கறவன் எல்லாம் ப்ராஜெக்ட் மேனேஜர்னு சொல்றான். என்ன கொடும சார் இது?

Monday, May 03, 2010
Saturday, May 01, 2010
Suraa
முன்னெச்சரிக்கை:
வில்லு, குருவி, வேட்டைக்காரன் எல்லாம் எதிர்பார்த்து சென்றால் பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சும். நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் சுமாராகத் தான் பூர்த்தி செய்கிறது.
கதை: வழக்கம் போல ஒன்றும் பெரிதாக இல்லை. கதாநாயகன் வாழும் யாழ் [கண்டிப்பாக இந்த பெயர் தேவையா?]குப்பத்தை வில்லன் அபகரிக்க முற்படுகிறான். அதை முறியடித்து, அங்கு இருக்கும் அனைவருக்கும் நல்ல வீடு கட்டிக் கொடுத்து விட்டு கல்யாணம் செய்து கொள்கிறார். கிளைமாக்சில் ஏன் கல்யாணம் என்றால் அங்கு இருக்கும் அனைவருக்கும் வீடு கட்டி கொடுத்து விட்டு தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்பது அவர் முடிவு.
விஜயின் அறிமுக காட்சியை விட வடிவேலுவின் அறிமுக காட்சிக்கு அதிக விசில் கைதட்டல். [என்னிடம் இருந்த எக்ஸ்ட்ரா டிக்கெட்டை வாங்கியவர் வடிவேலுக்காகத் தான் வந்ததாக சொன்னார்.] படத்தின் முன் பாதியில் பெரும் பகுதியும் பின் பாதியில் கொஞ்சமும் வடிவேல் தான் தாங்குகிறார். [சில பழைய காமெடிகளை தவிர்த்திருக்கலாம்]
விஜய் படத்தின் இந்த கதைக்கு இப்படி ஒரு திரைக்கதையே போதும், அதிகம் மெனக்கெட வேண்டாம் என நினைத்திருப்பார் போல. சில பல பொத்தல்கள். முக்கியமான தருணங்களில் காணாமல் போகும் வடிவேல் ஒரு உதாரணம்.
புது வில்லன். நன்றாகவே செய்திருக்கிறார். எல்லாரையும் அசால்டாக போடுகிறார். வழக்கம் போல விஜயை மட்டும் விட்டு வைக்கிறார்.
இரண்டு தடவை விஜயை பார்த்தவுடன் தமன்னா காதலில் விழுகிறார். இரண்டு தடவை பார்த்தவுடன் காதலா என்று எல்லாம் நாம் கேட்க வேண்டாம். விஜய்யே கேட்டு விடுகிறார். படத்தில் ஒரு இடத்தில் தமன்னா எங்க அப்பா நம்ம காதலுக்கு ஒன்னும் சொல்ல மாட்டார், ஏன்னா அவர் ஒரு டம்மி பீசு என்று சொல்வார், இந்த படத்தில் அவரே டம்மி பீசு தான் என்பது அவருக்கு தெரியுமா? பாடல் காட்சிகளிலும் அவரைக் காண சகிக்கவில்லை. விஜயின் படங்களில் நன்றாக இருக்கும் கதாநாயகிகள் கூட கோரமாகத் தோன்றுவது ஏன் என எனக்கு பிடிபட வில்லை. [முன்பு அனுஷ், இப்பொழுது தம்மு] தம்முவுக்கு தம்ஸ் டௌன்! :(
விஜய் சற்றே வெயிட் போட்டு இருப்பது போலத் தோன்றியது.சம்பந்தம் இல்லாமல் வரும் பாடல் காட்சிகளில் டான்சில் பின்னியிருக்கிறார்.சில இடங்களில் நன்றாக காமெடியும் செய்கிறார்.[இதில் ஏதும் நான் காமெடி செய்யவில்லை] கருத்து கந்தசாமி போல கருத்துகள் சொல்லிக் கொல்கிறார். வழக்கம் போல அங்கும் இங்கும் தாவுகிறார். பறக்கிறார்.போலீஸ் வேஷம்,மிலிடரி வேஷம் எல்லாம் போட்டாச்சு, இதில் வித்தியாசமாக என்ன செய்வது என யோசித்து, சர்தார்ஜி கப்பல் அதிகாரி வேஷம் எல்லாம் போடுகிறார். [சர்தார்ஜிகளுக்கு எல்லாம் போராட யாரும் இல்லையா என்ன?] சுனாமி வருது சூறாவளி வருது ரெண்டும் சேர்ந்து வருது என்று எல்லாம் வசனம் கேட்கும் போது சிரிப்பு வருது. அவன் பார்த்தா கடற்கரையே பத்தி எரியும் என்று புகழ் நெடியும் பிரசார நெடியும் அடிக்கும் போது நமக்கு எரிச்சல் பற்றி எரிகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சுறா சுமார் தான்!

நட்டாற்றில் விட்ட நண்பர்கள்
நல்லவன் யார்?கெட்டவன் யார்?
யாரை எல்லாம் நம்பலாம்?
யாரை எல்லாம் நம்பக் கூடாது?
கஷ்டம் என்றால் காணாமல் போய் விடுபவர்கள் யார்?
உண்மையான நண்பர்கள் யார்?
உதவிக்கு வருபவன் யார்? ஓடுபவன் யார்?
துன்பம் என்றால் துணை நிற்பவர் யார்?
இவர்கள் அனைவரையும் நேற்று நான் கண்டுகொண்டேன்.
சுறா படத்துக்கு எக்ஸ்டராவா ஒரு டிக்கெட் இருக்கு. வருவாயா என எனக்கு தெரிந்த எல்லாரையும் கேட்டேன். யாருமே துணைக்கு வரவில்லை!
பி.கு
பிரச்னைனா பயந்து போக நாங்க எல்லாம் புறா இல்லை. சுறா ரசிகர்கள், அதனால் தனியாக தில்லாக சென்றேன்!

Subscribe to:
Posts (Atom)