முன்னெச்சரிக்கை:
வில்லு, குருவி, வேட்டைக்காரன் எல்லாம் எதிர்பார்த்து சென்றால் பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சும். நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் சுமாராகத் தான் பூர்த்தி செய்கிறது.
கதை: வழக்கம் போல ஒன்றும் பெரிதாக இல்லை. கதாநாயகன் வாழும் யாழ் [கண்டிப்பாக இந்த பெயர் தேவையா?]குப்பத்தை வில்லன் அபகரிக்க முற்படுகிறான். அதை முறியடித்து, அங்கு இருக்கும் அனைவருக்கும் நல்ல வீடு கட்டிக் கொடுத்து விட்டு கல்யாணம் செய்து கொள்கிறார். கிளைமாக்சில் ஏன் கல்யாணம் என்றால் அங்கு இருக்கும் அனைவருக்கும் வீடு கட்டி கொடுத்து விட்டு தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்பது அவர் முடிவு.
விஜயின் அறிமுக காட்சியை விட வடிவேலுவின் அறிமுக காட்சிக்கு அதிக விசில் கைதட்டல். [என்னிடம் இருந்த எக்ஸ்ட்ரா டிக்கெட்டை வாங்கியவர் வடிவேலுக்காகத் தான் வந்ததாக சொன்னார்.] படத்தின் முன் பாதியில் பெரும் பகுதியும் பின் பாதியில் கொஞ்சமும் வடிவேல் தான் தாங்குகிறார். [சில பழைய காமெடிகளை தவிர்த்திருக்கலாம்]
விஜய் படத்தின் இந்த கதைக்கு இப்படி ஒரு திரைக்கதையே போதும், அதிகம் மெனக்கெட வேண்டாம் என நினைத்திருப்பார் போல. சில பல பொத்தல்கள். முக்கியமான தருணங்களில் காணாமல் போகும் வடிவேல் ஒரு உதாரணம்.
புது வில்லன். நன்றாகவே செய்திருக்கிறார். எல்லாரையும் அசால்டாக போடுகிறார். வழக்கம் போல விஜயை மட்டும் விட்டு வைக்கிறார்.
இரண்டு தடவை விஜயை பார்த்தவுடன் தமன்னா காதலில் விழுகிறார். இரண்டு தடவை பார்த்தவுடன் காதலா என்று எல்லாம் நாம் கேட்க வேண்டாம். விஜய்யே கேட்டு விடுகிறார். படத்தில் ஒரு இடத்தில் தமன்னா எங்க அப்பா நம்ம காதலுக்கு ஒன்னும் சொல்ல மாட்டார், ஏன்னா அவர் ஒரு டம்மி பீசு என்று சொல்வார், இந்த படத்தில் அவரே டம்மி பீசு தான் என்பது அவருக்கு தெரியுமா? பாடல் காட்சிகளிலும் அவரைக் காண சகிக்கவில்லை. விஜயின் படங்களில் நன்றாக இருக்கும் கதாநாயகிகள் கூட கோரமாகத் தோன்றுவது ஏன் என எனக்கு பிடிபட வில்லை. [முன்பு அனுஷ், இப்பொழுது தம்மு] தம்முவுக்கு தம்ஸ் டௌன்! :(
விஜய் சற்றே வெயிட் போட்டு இருப்பது போலத் தோன்றியது.சம்பந்தம் இல்லாமல் வரும் பாடல் காட்சிகளில் டான்சில் பின்னியிருக்கிறார்.சில இடங்களில் நன்றாக காமெடியும் செய்கிறார்.[இதில் ஏதும் நான் காமெடி செய்யவில்லை] கருத்து கந்தசாமி போல கருத்துகள் சொல்லிக் கொல்கிறார். வழக்கம் போல அங்கும் இங்கும் தாவுகிறார். பறக்கிறார்.போலீஸ் வேஷம்,மிலிடரி வேஷம் எல்லாம் போட்டாச்சு, இதில் வித்தியாசமாக என்ன செய்வது என யோசித்து, சர்தார்ஜி கப்பல் அதிகாரி வேஷம் எல்லாம் போடுகிறார். [சர்தார்ஜிகளுக்கு எல்லாம் போராட யாரும் இல்லையா என்ன?] சுனாமி வருது சூறாவளி வருது ரெண்டும் சேர்ந்து வருது என்று எல்லாம் வசனம் கேட்கும் போது சிரிப்பு வருது. அவன் பார்த்தா கடற்கரையே பத்தி எரியும் என்று புகழ் நெடியும் பிரசார நெடியும் அடிக்கும் போது நமக்கு எரிச்சல் பற்றி எரிகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சுறா சுமார் தான்!
11 comments:
டேய்.. இன்னுமா விஜய் படம் பார்த்துட்டு இருக்கிங்க, அதுவும் முதல் நாள்...!?!? ஆண்டவா..
ஊருக்காரா எனக்கு ரிஸ்க் எடுக்கறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி :P
உங்க கடமை உணர்ச்சிய என்னன்னு சொல்லுறது? The review was good. Sad for you for T. ஏன் உங்களுக்கு மட்டும் இப்படி ஒரு சோதனை? :-)
Ahaa; another T review. Vera oru azhagi illaya tamizh padathulla ??
Vijay yaaru saar ?? More education please. You are obviously acquainted very well to make out that "konchum weight potturukkaru" !!
One thing I am not able to understand. Every movie review by everybody ranges from maha bore, to bore to sumaar. I am yet to read a "ga ga" review". Why then would you torture yourself to go to Devikala theatre in mid summer as Gils did ????
@ram மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் என் பெயர் இருக்கும் அது கடமை. கடமை .
Thanks. If T goes, there wil be some U, V, W,X,Y, Z.
நல்லவங்களை தான் ஆண்டவன் சோதிப்பான் அப்படின்னு சொல்வாங்க.நான் வேற ரொம்ப நல்லவன்.
@ ramesh T was very much disappointing. There are lot more ;)
Vijay is one more actor who aspires to enter politics and day dreams that he could become CM.Ppl say once he used to act in soft porn movies :P I felt the weight thing cause in earlier movies he was lookin more like me :P
There are few movies for which i go gaga all over. say manirathnam movies, quentin tarentino movies.
and to be philosophical it is basic human tendency to find faults ;)
and again it is human nature to be in perpetual misery. We dont see it as misery or torture. We see that as pure fun! it also helps you to improve your patience perserverance. :P
I think we should also undergo similar miseries, cos P has been pestering us to take him to the movie. Aanaalum ungalukku romba poruma athigam thaaan
I seriously think you should nip this bad habit of P in the bud :P :D
I hear many ppl telling me that kids love to watch his movies. That concerns me a lot :(
when compared to his previous movies this is nt that bad. Hear tickets are easily available. so enjoooy.
@ CG wat will u say,if i tell you i have watched yarukku yaro by sam anderson(more than once), nayagan(j.k riteesh) in theatre, thennavan(vijaykanth) first day in theatre,anjenaya(ajith)again first day in theatre.
Dont worry, hd also crazy of those movies, esp vijayakanths narasimha, and another film where he shoots every wrong-doer(ellam ore maathiri irukku bayangara confusion). Nayagan -OMG he was all praise of him - would have even opened a mandram if given a chance :P
Wow, wow. wat a sweet coincidence. I too liked nayagan.I have a good DVD collection of vijaykanth movies! let me know where to send those gifts to him :P :D
Post a Comment