Wednesday, February 17, 2010

இரு பிரார்த்தனைகள்

ஒரு நாளின் 12% (தோரயமாக) நேரத்தை 60 KM பேருந்தில் பயணம் செய்து விரயம் செய்பவன்.

அதை உபயோகமாக கழிக்க இரு வழிகள்.
ஒன்று புத்தகம் படிக்கலாம்.
சாதாரணமாகவே பேருந்தில் படித்தால் "Varying focal length more strain to eyes". நான் பயணம் செய்யும் சாலையின் மேடு பள்ளங்களுக்கு சொல்லவே வேண்டாம். மேலும் மீதி 80 % நேரத்தை இது போல் கணினியைப் பார்த்து கண்களை கெடுத்துக் கொண்டிருப்பவன்.இன்னும் கண்ணாடி போடாமல் இருப்பதற்கு காரணம் அவ்வப்போது கண்ணை குளிர்ச்சி படுத்துவதானால் தான். படுக்க போகுமுன் வெள்ளரி வைத்து தூங்கி. நீங்கள் வேறு ஏதாவது நினைத்திருந்தால் Surf Excel உபயோகிக்கவும்.
இந்த ஞான அறிவு எல்லாம் கிடைத்ததே இரண்டாவது வழியை பின்பற்றிய போது தான்!அதாவது தூங்க முற்பட்ட போது.
அந்த பரவச பேரானந்த பெருநிலையை அடைய எத்தனை சோதனைகள்!
எங்கும் எப்போதும் எப்படியும் படுத்து உறங்குவது என்பது புலிகள் போல கொஞ்சம் கொஞ்சமாக என்னில் அருகி வந்துக் கொண்டிருக்கும் குணம்.
இதை சற்றும் புரிந்துக் கொள்ளாமல் பாடுகிறேன் என்ற பெயரில் பிதற்றிக் கொண்டிருப்பவன் ஒரு பக்கம்.[ஒரு நாள் இறங்கும் போது சில்லறைக் காசு போட்டால்  இவன் சரி ஆகி விடுவான்] MBA வையும் Matrimonial  சமாசாரத்தையும் ஒரே மூச்சில் அலசும் பெண்கள். இவர்களை நிச்சயமாக பொறுத்துக் கொள்ளலாம் [வேண்டும்] ஏனெனில் மேற்கூறிய. அரிய அறிவுச் செய்தி எல்லாம் சொன்னவர்கள் இவர்களே!
ஆனால் இந்த அலைபேசியில் அலப்பறை விடுபவர்களிடமிருந்து  எனக்கு பரம பிதா என்று மோட்சம் வாங்கித் தருவார் என்று யாராவது Nostradamas யை கேட்டு சொல்லுங்கள்.
மேனேஜரிடம் திட்டு வாங்குவது என்ன! அவரை திட்டுவது என்ன?
Trouble shoot செய்வது என்ன? Onsite சப்போர்ட் கொடுப்பது என்ன?
அப்பா கிளம்பிட்டேன், வந்து பிக் பண்ணிக்கோ என்று சொல்லி விட்டு, என்னடா பண்றே, பிஸியா இருக்கியா என்று அடுத்த நிமிடம் கடலையை தொடர்வது என்ன?

இவர்களை திருத்த முடியாது. திருந்தவும் கூடாது என்று எம்பெருமானை வேண்டிக் கொண்டு செல்போன் கம்பெனிகளின் பங்குகளை வாங்கி போடுவோம்.
இப்படி எல்லாம் நான் எழுதக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் நான் நினைக்கும் போது எல்லாம் நித்திரா தேவி என்னை அணைக்க வேண்டும் என்று உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள்!

Monday, February 15, 2010

காலப்பயணம்

Time Machine இல்லாமல்,
நூறாண்டுகள்
பின்னோக்கிப் பயணம்,
நாள் முழுதுமான
மின் தடையில்!

Friday, February 12, 2010

Prisoner's Dilemma for IT Dummies

Prisoner's Dilemma. You would have come across this theory, if you had read Game Theory
To know the history and geography of the Game Theory, go here.
For all those, who don't have time ,who cannot comprehend the above link, who want it simple short and sweet, read below:

Appraisal Time, Low Ratings.  
Hike Time, Very Very Low.
No room for growth. No chance for onsites.
So two team mates, Veeru and Jai decide to team up and pursue outside opportunities.
Both attend same company interview.
No No,No silly situations like, we have only one position and we could take only one of you.
That company is in the hiring spree. It hires both of them and gives them the same hike.
Now they come back, high five each other, submit their resignation letters on a friday evening, auto scheduling it for 11.50 P.M with exactly same wordings.
Sunday, they catch up with each other and swear to each other they should stand by their decisions.
Monday, the manager tosses a coin and says,
Heads, Veeru comes to discussion room first,
Tails, Jai comes to discussion room first
Fortunately, this time Veeru wins, goes to discussion room first,
"I have one long term opportunity. If you refuse, I shall offer the same to Jai."
Now the dilemma of Veeru is called Prisoner's Dilemma!

Disclaimer:
The incidents,instances if any resembles real time occurences, they are mere coincidences!
Onsite: To some IT engineers, it is the holy grail of their career. Generally you do the same work at client's location (Usually USA and U.K) rather than doing it from India and you get paid in USD or GBP.

Wednesday, February 10, 2010

ச்சீய் இந்தப் பழம் புளிக்கும்

எல்லாம் நன்மைக்கே!

இதுவும் கடந்து போகும்.

எது நேற்று மற்றோருவனுடையதோ, அது இன்று உன்னுடையது, நாளை யாருடையதோ!

எதை கொண்டு வந்தாய் நீ? இழப்பதற்கு!

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!

போனால் போகட்டும் போடா!

உன்னை சொல்லிக் குற்றமில்லை, என்னை சொல்லிக் குற்றமில்லை!

ஆண்டவன் கொடுக்கிறதை யாராலும் தடுக்க முடியாது. ஆண்டவன் தடுக்கிறதை யாராலும் கொடுக்க முடியாது.

ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும்.

சைக்கிளை விட்டு இறங்கினால் தானே பைக்கில் செல்ல முடியும்.

இருக்கும் மொபைல் தொலைந்தால் தானே புது மொபைல் வாங்க முடியும்.

நீங்கள் முழு மனதோடு ஒன்றை விரும்பினால் நீங்கள் அதை அடைய முழு உலகமும் ஒத்துழைக்கும். அப்படியும் அது உங்களுக்கு கிடைக்க வில்லையெனில் நீங்கள் அதை முழு மனதோடு விரும்பவில்லை என்பது தான் பொருள்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துகள்!

ஹாசினி பேசும்படம் விமர்சனம் பற்றிய விமர்சனம்

பொதுவாக டிவி நிகழ்ச்சிகளும் சரி, டிவியும் சரி அதிகம் பார்த்ததில்லை, பார்ப்பதுமில்லை, பார்க்க வாய்ப்பும் கிடைப்பதில்லை. Twitter-ல் LazyGeek  ஹாசினி பேசும்படத்தின்  ஆயிரத்தில் ஒருவனின் விமர்சன லிங்க்  கொடுத்திருந்தார். ஆயிரத்தில் ஒருவன் என்பதால் ஆவலுடன் முழுதும் பார்த்தேன்.

இல்லை, நிச்சயமாய் நான் படத்தை விமர்சனம் செய்ய போவது இல்லை.
போதும் போதும் என்று சொல்லுமளவு இணையத்தில் நம் மக்கள் இதை ஆராய்ந்து   விட்டனர்.ஏன்  என்று யோசித்தால் "பழுத்த மரம் தான் கல்லடி படும்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. [கொழுத்த நாயும் கல்லடி படும் என்பதும் எனக்குத் தெரியும்] ஆனால் இப்படி எல்லாம் படம் எடுக்கத் துணிந்த தயாரிப்பாளரின் தைரியத்திற்கு தலை வணங்குகிறேன்.

விகடனில் செல்வராகவன் எழுதிய "கனா காணும் காலங்கள்" படித்த காலத்திலிருந்தே  அவர் மேல் ஒரு அளவு கடந்த ஆச்சரியம் உண்டு.நிகழ்ச்சியில் அவர் பேட்டியைக் கண்ட பின் சினிமாவின் மீது அவருக்கு இருக்கும் மரியாதை, கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், தன்னடக்கம், நல்ல படம் எடுக்க வேண்டும்,படம் பார்ப்பவன் தான் முக்கியம் வேறு யாரும் முக்கியமில்லை என்ற அவரின் சிந்தாந்தம் தான் அவரின் வெற்றிக்கு காரணம் என்று தோன்றியது.[யார் எந்த துறையில் வெற்றி பெறுவதற்கும் இவை தான் அடிப்படைக் காரணம் என்பதும் அடியேன் கருத்து]

சினிமாவின் பல்வேறு பரிமாணங்களை மிக அருகில் பல்வேறு பார்வைகளில் பார்க்கும் வாய்ப்பு இருந்தாலும் அது சுஹாசினிக்கு குறையாக இல்லாமல் நிறையாக இருப்பது நிகழ்ச்சிக்கு நல்ல விஷயம். [அதிக அறிவு ஆபத்தானது]

அட என்ன, வீட்டில் அவரும் மணியும் சினிமாவை பற்றி பேசாமலா இருப்பார்கள். இந்த படத்தில் இது சரியில்லை அது சரியில்லை அப்படி செய்து இருக்கலாம் இப்படி செய்து இருக்கலாம் என்று எல்லாம் வீட்டில் பேசி இருந்து அதன் தாக்கம் நிகழ்ச்சியில் பிரதிபலித்தால்  நிகழ்ச்சி நாசமாய் போய் விடும்.அதையும் தாண்டி சுஹாசினி  அவரின் தனித்துவத்தை தக்க வைத்துக் கொள்வதே ஒரு சவாலான விஷயம்.

பழகிய மனிதர்களைப் பற்றியும் நல்லதோ கேட்டதோ கருத்து சொல்வதும் கடினமான வேலை தான்.

Finely Balanced Insider view என்றால் மிகையாகாது. ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சியின் நடுவே அவர் உபயோக படுத்தும் Hi -Fi ஆங்கில வார்த்தைகள் அவரை நம்மிடமிருந்து அன்னியபடுத்தி விடுகிறது!