Showing posts with label Movies. Show all posts
Showing posts with label Movies. Show all posts

Sunday, January 23, 2011

காவலன் குறிப்புகள்

ரொம்ப நாள் கழித்து விஜய் நடித்திருக்கிறார்.

அசின் கொஞ்சம் தாராளமாய் நடித்திருக்கிறார். அவர் ரேஞ்சுக்கு இது எல்லாம் தாராளம் தான்.

அசினுடன் வரும் பிகர் அசினை விட அம்சமாய் இருக்கிறார்! :P :D

வடிவேலுவின் காமெடி ரொம்ப லேட் பிக் அப்! சில இடங்களில் எவ்வளவு டிரை பண்ணியும் சிரிப்பு வரவே இல்லை! சில இடங்களில் சிக்ஸர் அடிக்கிறார்.

மற்றவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை!

விஜய் படத்தின் பாடல் காட்சிகளில் மக்கள் வெளியே போவது இது தான் முதல் முறை என நினைக்கிறேன்.[ஆரம்ப காலங்களில் கண்ணை மூடிக் கொள்ள வேண்டி இருந்தது எல்லாம் வேறு]

கதை நல்ல கதை. திரைக்கதை அங்கு அங்கு லைட்டாக சொதப்புகிறது. படத்தில் பாஸ்கரைப் போல அவ்வப் பொழுது எனக்கும் தூக்கம் வந்தது. ஆனால் கிளைமாக்ஸில் டக்கரான டிவிஸ்ட்.[சொதப்பல்களை எல்லாம் சொன்னால் சுவாரஸ்யம் போய் விடும்]

அனைத்தையும் விட என்னைப் போன்ற தீவிர விஜய் இரசிகர்களை ஏமாற்றி விட்டது :( இதற்காக விஜயை வன்மையாக கண்டிக்கிறேன்!

Friday, November 26, 2010

ஓய் ஓய்

காலையில் படுக்கையை விட்டு எழும் போது யாரெனும் அவ்வளவு பிரெஷ்ஷாக இருப்பார்களா எனத் தெரியவில்லை ஹீரோயினாக நடிக்கும் முதல் படத்தின் முதல் காட்சியில் ஷாமிலி தெரிகிறார்.அப்படி ஒரு மேக்கப். மேக்கப்புக்கு மட்டும் பேக்கப் சொல்வாரெனில் அனுஷ்காவை அம்போவென விடவும் ஷாமிலிக்கு சிம்மாசனமும் போட நான் ரெடி!

எதிரும் புதிருமான சித்தார்த்தும் ஷாமிலியும் தொலைபேசியில் பேசும் ஆரம்ப காட்சியைப் பார்த்து அளவிலா ஆர்வம் கொண்டு அகப்பட்டேன் நான்..அந்தோ பரிதாபம்! வழக்கமான காதல் வில்லனாய் கேன்சர் என வீணாய்ப் போன கதை பாழாய்ப் போன நேரம்!

சைல்ட் ஆர்ட்டிஸ்ட் என்றும், அஞ்சலி அஞ்சலி என ஷாமிலியைக் கலாய்ப்பது, கடியான காமெடியைக் கூட கதையோடு கலப்பது, தந்தையின் சாவிலும் கண் கலங்காமல் கிண்டல் பேச்சு பேசும் சித்தார்த் ஷாமிலிக்கு கேன்சர் என்றவுடனே கதறுவது பர்த் டே கிப்ட் கொடுக்கும் காட்சியை கிளைமாக்ஸில் மீண்டும் கனெகட் செய்வது என சிறப்பான சமாச்சாரங்கள் படத்தில் சில உண்டு. நெப்பொலியன், வினாயக்கடு படத்தின் ஹீரோ இவர்களோடு சித்தார்த்தின் ஐடியா பிரமொஷனும் அவ்வப்பொழுது படத்தில் உண்டு.[அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஷாமிலியின் ஆசையை நிறைவேற்று ஐடியா மூலம் ஐடியா வருவது எல்லாம் உண்மையிலேயே செம ஐடியா தான்!

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒருவர் கல்லூரியில் படிக்கும் ஷாமிலிக்கு நண்பர் என்பது, அவ்வளவு ஸிட்ரிக்ட்டான ஸ்ட்ராங்கான ஷாமிலி சட்டென சித்தார்த்தை வாரிசாக இன்ஸுரன்சில் போடுவதும், அவரோடு காசிக்கு கிளம்புவதும், கிடைக்கும் காசுக்கு ஆசைப்படுவதும், ஹெலிகாப்டரில் ஏறுவதும், பணத்தை பறக்க விடுவது என பலகீனமான சமாச்சாரங்கள் நிறைய நிறைய உண்டு.

படத்தில் ஷாமிலியின் வீட்டுப் பிரச்னையை சித்தார்த் தீர்த்து தான் மிகப் பணக்காரன் என்பதை எல்லாம் மறைப்பதை எல்லாம் பார்க்கும் போது கஜினி ஞாபகத்திற்கு வருவதையும்  கிளைமாக்ஸில் பெஞ்சில் சித்தார்த் பழைய கதையை சொல்லி ஷாமிலியின் நினைவாய் மழைக்கு காத்திருக்கும் போது 7 ஜி ரெயின்போ காலனி நினைவுக்கு வருவதும் தவிர்க்க முடிவதில்லை. சோகமான முடிவின் காரணமாய் மனம் கனமாவுதும் தவிர்க்க முடிவதில்லை.

பி.கு
படத்தில் ஷாமிலி சித்தார்த்தை கூப்பிடுவது எல்லாம் ஓய் ஓய் என்று தான்! ஒரு நிமிடம் என்னையும் யாரோ ஓய் என கூப்பிடுவது போலத் தோன்றுகிறது!

Thursday, November 25, 2010

கிக்கில்லாத தில்லாலங்காடி

பெரும்பாலும் படங்கள் பார்க்கும் போது, பேக் கிரவுண்ட்டில் போட்டு விட்டு, வசனம் மட்டும் கேட்டுக் கொண்டு, வேறு வேலை செய்வது தான் வழக்கம்..

அப்படித்தான் இந்த கிக் படமும். தமிழில் தில்லாலங்கடி என வந்தப் படம் தான். சக அறைவாசிகள் அறையில் அலற விட்ட போது பார்க்க நேர்ந்தது. போலி சரக்கை விட ஒரிஜினலில் தான் கிக் அதிகம் என அரையும் குறையுமாக தமிழில் பார்த்ததை தெலுங்கில் ஆசை தீர பார்க்க முடிவு செய்தேன்.[அதுவும் பாலகிருஷ்ணா நடித்த சமரஸிம்ஹ ரெட்டி போன்ற படங்களைப் பார்த்தால் நிச்சயம் கிக் ப்ராப்திரஸ்து]

படத்தை ஓட விட்டு வேறு ஏதோ நோண்டிக் கொண்டிருக்க என்னடா ஏதும் சத்தம் வராமல் இருக்கிறது அதுவும் தெலுங்கு சினிமாவில் ஆரம்பத்தில் அமைதியா என அதிர்ச்சியான ஆச்சரியம் ! ஹீரோவுக்கு இப்படி ஒரு ஓபனிங்கா எனப் பார்த்தால் அது ஹீரோயினின் ஓபனிங். இலியானா யோகா செய்வதைப் பார்த்தால் நமக்கு மன அமைதி கெட்டு விடுகிறது.[கடைசியில் பேர் போடும் போது கூட மீண்டும் இலியானா யோகா செய்வதை காட்டுகிறார்கள், சில்பாவிற்கு போட்டி ரெடி] தமிழ் 3 இடியட்ஸிற்கு அவருக்கு ஏன் 1.5 கோடி என இதைப் பார்த்தால் புரியலாம். தெலுங்கு போக்கிரியில் பார்த்திருந்தாலும் இதில் பல மடங்கு பளிச்சிட்டது போல் பட்டது.

இரவி தேஜா! கல்லூரியில் முதன் முதலாக இவர் நடித்த இடியட் படத்தை பார்த்த போதிலிருந்ந்தே அவர் நடிப்பின் மீது ஒரு பிடிப்பு. அதுவும் அந்த படம் தான் தமிழில் சிம்பு நடித்த தம் என தெரிந்தவுடன் ரவி தேஜாவின் நடிப்பின் மீது அபார மதிப்பு! இதிலும் பட்டையைக் கிளப்புகிறார்.

இரண்டிலும் ஷ்யாமுக்கு ஒரே கதாப் பாத்திரம்.கனகச்சிதம்.தமிழில் தமன்னா, சந்தானம், லிவிங்சடன், பிரபு, சுஹாசினி ஆகியோர் தெலுங்கை விட சிறப்பாகச் செய்திருக்கின்றனர். வடிவேலு உட்பட மற்றவர்கள் எல்லாம் வெத்து தான்.
   
காமெடிக் காட்சிகளுக்கு தமிழில் மெருகூட்டியவர்கள் திரைக்கதையிலும் மெனக்கெட்டியிருக்கலாம். கதாநாயகனின் இரண்டு முகங்களும்[காதலன், கள்வன்] ஓன்றன் பின் ஓன்றாக காட்டியிருப்பதை தமிழில் மாற்றி மாற்றி காட்டி விறுவிறுப்பு காட்டியிருக்கலாம்

பெரும்பாலான தெலுங்கு படங்கள் தமிழ் நடிகர்களுக்குப் பொருந்துவதில்லை.அதுவும் அப்படியே காட்சிக்கு காட்சி காப்பியடிக்கும் போது! .ஒரே மாதிரி ஒலிக்கும் சில வார்த்தைகள் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு பொருள் படும். படங்களும் அப்படித்தான். பெரும்பாலான படங்கள் தெலுங்கில் பார்க்கும் போது திவ்யமாகவும் தமிழில் திராபையாகவும் இருக்கிறது.

Monday, November 15, 2010

மகதீரா

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்னும் சொல்லிற்கேற்ப தெரிந்தோ தெரியாமலோ தெலுந்கு படங்களின் மீது அதீத பைத்தியம். தமிழில் தெரியும் அபத்தங்கள் தெலுங்கில் கண்ணுக்குப் படுவதில்லை. பட்டாலும் கண்டு கொள்வதில்லை.

அப்படியிருந்தும் கூட ராம்சரண் தேஜா நடித்த சிறுத்தாவைப் பார்த்து சிதறிப் போயிருந்தேன். அதன் காரணமாக ஆஹா ஒஹோ என்று
ஊரெல்லாம் புகழ் பாடியிருந்தும் அந்த மூஞ்சியைப் பார்க்க வேண்டுமா என மகதீரா பார்ப்பதை தள்ளிப் போட்டுக் கொண்டு இருந்தேன்.

கதாநாயகியும் கதாநாயகனும் மலையுச்சியிலிருந்து செத்துப் போகும் ஆரம்ப காட்சியில் இருந்தே அதகளம் தான்.

தெலுங்கு சினிமாவிற்கு தெலுங்கில் பெயர் வைக்கிறார்களோ இல்லையோ தெலுங்கில் டைட்டில் வைக்கிறார்களோ இல்லையோ பிரம்மானந்தம் இருப்பார் இதிலும் இருக்கிறார். ஆனால் காமெடி தான் இல்லை. படத்திற்கு அதன் தேவையும் இருப்பதில்லை மீனா குமாரி புகழ் நடிகையின் குத்தாட்டமும் உண்டு. கிராபிக்ஸ் புண்ணியத்தில் சிரஞ்சிவியின் பழைய டான்ஸும் உண்டு. ராம் சரண் தேஜாவும் டான்ஸில் குறை வைப்பதில்லை. எந்த தெலுங்கு ஹீரோவும் டான்ஸில் குறை வைப்பதில்லை.

இரண்டு கதாநாயகிகளில் ஒரு கதாநாயகியின் கனவில் கதாநாயகன் மற்றொரு கதாநாயகியுடன் ஆட்டம் போடுமாறு காட்சியமைக்கும் தெலுங்கு சினிமாவில் குத்தாட்ட நடிகை கூட கதாநாயகியாக தோன்றும் புரட்சியான சமாச்சாரம் எல்லாம் உண்டு

காஜல் கண்ணுக்கு குளிர்ச்சியாக! ஹும்! அதுவும் காஜலின் துப்பட்டா தனி காரெக்டர். படத்தின் பல திருப்பங்களுக்கு துப்பட்டா தான் காரணம்!

ஆசைப் பட்டால் அடைய வேண்டும் இல்லையெல் அழித்து விட வேண்டும் என்னும் பவர் புல் வில்லன்.  இவரைப் போய் சுறாவில்  அவ்வளவு சின்னபுள்ளத் தனமாக காட்டிவிட்டார்களே என்ற வருத்தம் வராமலில்லை.

கெட்டவனும் நல்லவனும் ஒரு பெண்ணைக் காதலிக்க நல்லவன் பெண்ணை கைப்பிடிக்கும் காய்ந்து கருவாடான கதை என்று ஒதுக்கித் தள்ள முடியாத அளவு திரைக்கதையில் தூள் கிளப்பி இருக்கிறார்கள்.

அதுவும் ஒரே கதையை ஒரே படத்தில் இரு ஜென்மம் என சலிக்க வைக்காமல் இருமுறை காட்டுவதில் பின்னி பெடலெடுக்கிறார்கள்.அதுவும் ஒரு சில காட்சிகளை மூன்று முறை எல்லாம் காட்டியும் கடுப்பாக இருப்பதில்லை.

இருஜென்மங்களிலும் வில்லன் ஈட்டி எறிவதில் கில்லியாக இருப்பது, கதாநாயகியின் தந்தையைக் கொல்வது, என பல இடங்களில் இரு ஜென்மங்களுக்கும் தொடர்பு வைத்து திரைக்கதை அமைத்திருப்பதை பாராட்டியே ஆக வேண்டும்.

கிளைமாக்சில் ஹெலிகாப்டரை கார் மூலம் காலி செய்வதைப் பார்க்கும் போது டை ஹார்ட் 4 நினைவில் வந்து போகிறது.

ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை வந்தும் கதைப் பற்றி சொல்லவில்லையே எனக் கேட்பவர்களுக்காக
இந்த ஜென்மத்தில், ஒரு ஸ்பரிசத்தில் முன் ஜென்மவாசனையை முகர்ந்து முகம் கூட பார்க்காமல் காதலில் விழும் கதாநாயகன்.

முன் ஜென்ம வாசனை எதுவும் இல்லாமல் காதலில் விழும் கதாநாயகி.

 பழி வாங்க வந்த இடத்தில் காதலில் விழும் வில்லன்.
காதலில் விழுந்த கணமே தந்தையைக்  கூட காலி செய்யும் தன்னால் அவளை தீண்டக் கூட முடியாத காரணத்தை தேடிச் செல்லும் வில்லன் முன் ஜென்ம கதையை அறிந்துக் கொள்கிறார்.

வாசனையை மட்டுமே முகர்ந்த கதாநாயகன், முன் ஜென்மத்தில் உயரத்திலிருந்து விழுந்ததைப் போல இந்த ஜென்மத்திலும் விழும் போது எல்லாக் கதையையும் நினைவுக்கு வருகிறது.
முன் ஜென்மத்தில் ஷெர் கான்னாக இருந்து கதாநாயகனின் சாவுக்கும் காதலை பிரிப்பதற்கும் காரணமாக இருந்ததை நினைத்து வருந்துபவர் சாலமனாக இந்த ஜென்மத்தில் கதாநாயகனின் உயிரைக் காப்பாற்றி காதலை சேர்ப்பதற்கும் உதவுகிறார்.

இதனிடையே வில்லனின் வில்லத் தனத்தால் கதாநாயகனை வெறுக்கும் கதாநாயகிக்கு பூர்வ ஜென்ம ஞாபகத்தை வரவைக்க அதே இடத்திற்கு கதாநாயகியைத் தூக்கி சென்று முன் ஜென்மத்தில் வில்லனைக் கொன்ற அதே கத்தியைக் கொண்டு சண்டையைப் போடுகிறார். காதலிக்கும் முன் ஜென்ம வாசனை வந்து விடுகிறது.

முன் ஜென்மத்தில் கதாநாயகியைக் கொன்றதைப் போல இப்பொழுதும் கொல்ல வில்லன் நினைக்க , முன் ஜென்மத்தில் செய்த தவறை மனதில் வைத்து முன்னெச்சரிக்கையாக வில்லனைக் கொன்று காதலியைக் காக்கிறார் கதாநாயகன்.

இதைப் படித்தப் பின். “இப்பொழுது நான் இருப்பது முன் ஜென்மமா என்ன ஜென்மம்” என்ற சந்தேகம் வந்தால் படத்தைப் பார்த்து தெரிந்துக் கொள்ளவும். இப்படி குழப்பமான கதையை தெள்ளத் தெளிவாக எடுத்திருக்கிறார்கள்.

மகதீரா ஒரு மிஸ் செய்யக் கூடாத படம்!

Monday, June 21, 2010

நம்மைப் போல் ஒருவன்

அப்பா வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பக்கத்தில் பெண் குழந்தை அம்மாவுக்கு நெக்லஸ்  செய்து கொண்டிருக்க கதவு தட்டப்படுகிறது. திறக்கும் அப்பாவின் மண்டை மீது உருட்டுகட்டையில் அடி. கைகள் கட்டப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு, அம்மாவுக்கும் அதே மரியாதை. இதனையும் அரங்கேறும் சமயம் கூட வந்தவன் வீட்டில் இருப்பதை எல்லாம் சுருட்டுகிறான். அப்பொழுது வந்து நிற்கிறது அந்த குழந்தை. குழந்தைகளுக்கு என்னை மிகப் பிடிக்கும் என்று சொல்லியவாறு அதை தூக்கிக் கொண்டு செல்ல அப்பா சுயநினைவிழக்க காட்சி வெட்டப்படுகிறது.[பின் வரும் வன்முறைக் காட்சிகள் எவ்வளவு கொடூரமாய் இருக்கும் என்பதற்கு இது ஒரு சாம்பிள்]

நோயாளி செத்தாலும் நான் செய்யும் ஆபரேஷன் சக்சஸ் என்னும் சொல்லும் டாக்டரைப் போல், என் கட்சிக்காரனுக்கு நீதி கிடைக்க விட்டாலும் நான் ஆஜரான வழக்கு ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஒரு அரசாங்க வக்கீல்.

கொலை செய்தவன், கூட திருடியவன் தான் கொலை செய்தான் என்று நான் சாட்சி சொல்லத் தயார் ஆனால் எனக்கு குறைந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என டீல் போட அதை வக்கீல் ஒப்புக் கொள்கிறார். யாரையும் கொல்லாதவனுக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.

கோபம் கொண்ட அப்பா பழி வாங்க சுபம் என முடியும் கதை தானே என்று எல்லாம் நினைக்க கூடாது.

சரியாக பத்து வருடங்கள் கழித்து, சொந்த மகளின் அரங்கேற்றத்துக்கு செல்லாமல், அதற்கு மனைவியிடம் திட்டு வாங்கி கொண்டே,மகளின்  மனம் நோகாமல் இருக்க அவள் செய்த ரொட்டி துண்டை கொறித்து விட்டு அவசர அவசரமாக கிளம்புகிறார்.  தான் தண்டனை வாங்கி கொடுத்தவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்லப்படுவதை பார்க்க. [முந்தைய பாராவில் சொல்லப்பட்ட வழக்கு தான் என்று எல்லாம் விலாவரியாக சொல்ல வேண்டும் என்று எல்லாம் எதிர் பார்க்க படாது]


கிளம்பும் போது உடன் வரும் பெண்மணியிடம் ஒருவர் தூங்க செல்வது போல் இருக்கும், அவ்வளவு தான் ஒரே வித்தியாசம் இவர் திரும்பி எழ மாட்டார் என்று சொல்லும் போது, அந்த கைதி அப்படி சாக மாட்டான் என்று ஊகித்தால் உங்களுக்குள் ஒரு சினிமாக்காரன் ஒளிந்திருக்கிறான் என அர்த்தம்.
 
 அவனை கொல்லப்படும் திரை திறக்கும் போது வக்கீலின் பெண் அரங்கேற்ற திரை திறப்பது என்று பொயடிக் டச்! [இப்படி பல டச்கள் உண்டு]
 
மரணத் தண்டனைக் கைதி  இப்படி தான் சாக வேண்டும் என்று சட்டம் சொல்கிற படி சாகாமால், ரத்தம் கக்கி கொடூர முறையில் சாவதால் கொலை விசாரணை தொடங்குகிறது. கொலை நடந்த இடத்தில் "உண்மையோடு போராட முடியாது" என்னும் பொருள் பட எழுதிய ஒரு பாட்டில் கிடைக்கிறது.

வழக்கு நடக்கும் போது ஆப்ருவர் ஆன குற்றவாளி இதையே தன்னிடம் சொன்னது வக்கீலுக்கு நினைவு வர அவனை சந்தேகித்து அவனை பிடிக்க கிளம்புகிறது.

அவனை தேடி போலீஸ் வந்து கொண்டிருப்பதை ஒருவன் போனில் சொல்கிறான்.  போலீஸ் காரில் தப்பித்து போக வழியும் சொல்கிறான், அப்படி அவன் வந்து சேருமிடம் அந்த பெண்ணின் அப்பா தான் என்று சரியாக சொன்னால் படிப்பதை நிறுத்தி விட்டு தாரளமாக கோடம்பாக்கம் கிளம்பலாம்.

தன் மனைவியையும் குழந்தையும் கொன்றவனை முகமூடி அணிந்து  மிக கொடூரமாக கொலை செய்கிறான். அதை படமும் பிடிக்கிறான்.

போலீஸ் பிடிக்க வரும் போது, terminator படத்தில் அர்னாலட்  அறிமுகம் ஆகும் உடையில் சரண் அடைகிறார்.

விசாரிக்க வரும் வக்கீலிடம் அவர்களை கொல்ல ஆசை பட்டதுண்டு திட்டமிட்டதுண்டு என்று எல்லாம் சொல்கிறார்.  குற்றத்தை ஒப்புக் கொண்டாய் என்று வக்கீல் கிளம்பும் போது நான் கொன்றேன் என்று சொன்னால் தான் ஒப்புதல் என்று அவருக்கு படம் எல்லாம் சொல்லி விட்டு எனக்கு ஜெயிலில் தூங்க நல்ல மெத்தை கொடுத்தால் ஒப்புக் கொள்வேன் என்று டீல் போடுகிறார்.

டீலுக்கு ஒப்புக் கொல்லாத வக்கீல் இவரை கோர்ட்டில் ஆஜர் செய்யும் போது தானே வாதாடி பெயில் வழங்கவிருக்கும் சமயம் ஜட்ஜை கடுப்பேற்றி மீண்டும் ஜெயிலுக்குப் போகிறார். [இந்த ஜட்ஜ் தான் பழைய வழக்கிலும் ஜட்ஜ் என்று எல்லாம் தெளிவாக சொல்லாமல் புரிந்துக் கொள்ள வேண்டும்]

இடையில் முன்பு, கொலை செய்ததை படம் பிடித்ததை வக்கீல் வீட்டுக்கு அனுப்ப அது தான் அரங்கேற்ற வீடியோ என நினைத்து அவரின் குழந்தை பார்த்து விடுகிறது.

மெத்தை எல்லாம் தர முடியாது என வீராப்பு காட்டிய  வக்கீல் இதை கேள்வி பட்டவுடன் கொடுத்து தொலைக்கிறார்.

அடுத்த நாள் குற்றத்தை ஒப்புக் கொண்ட அப்பா நல்ல சாப்பாடு வேண்டும் என்று எல்லாம் கேட்கிறார். டீல் போட்டு நான் உனக்கு எதாவுது கொடுக்க நீயும் எதாவது கொடுக்க வேண்டும். உன்னிடம் கொடுக்க எதுவும் இல்லை என கிளம்பும் போது "ஒரு பெயர் சொல்லி அவன் உயிர் இருக்கிறது என்னிடம் கொடுக்க என்று சொல்கிறான்"

அந்தப்  பெயர் பத்து வருடங்களுக்கு முன்பாக நடந்த வழக்கில் எதிர் தரப்பு வக்கீல். அவர் மூன்று நாட்களாக  காணவில்லை என்று தெரிய வரும் போது அப்பாவுக்கு நல்ல சாப்பாடு என்று ஒப்புக்கொள்கிறார்கள்
 மெனு சொல்லி விட்டு சரியாக ஒரு மணிக்கு சாப்பாடு வர வேண்டும் என சொல்கிறான். சாப்பாடு சரியான நேரத்துக்கு வராத போதும் சாப்பிடுவதற்கு ஸ்பூன் வங்கிக் கொண்டு, காணாமல் போனவனை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை சொல்கிறான்.  

ஒளித்து வைத்த இடத்திற்கு 15  நிமிடத்தில் போய் சேர்ந்தால் எதிர் காட்சி வக்கீல் ஆக்சிஜன் உதவியோடு உயிரோடு புதைக்கபட்டிருப்பார். அந்த ஆக்சிஜன் சப்ளை சரியாக 1: 15 க்கு நிறுத்தப்பட்டிருக்கும்.  சரியான நேரத்திற்கு சாப்பாடு போயிருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, கைது செய்யப்பட்ட அப்பா உடன் இருந்த கைதியை கொன்று விட்டார் என்றும் தனிமை சிறையில் அடைக்க பட்டு விட்டார் என்று செய்தி வரும்.

தனிமைச் சிறையில் இருக்கும் போது சந்திக்க வரும் வக்கீலிடம் இது ஆரம்பம் தான் இனி மேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்றும் இதில் சம்பந்த பட்டவர்கள் அனைவரையும்
கொல்வேன் என்றும் சொல்கிறார். தன் வழக்கில் நீதி கிடைக்க வில்லை என்றும் அதற்கு பாடம் கற்பிக்கவே இதை எல்லாம் செய்வதாக சொல்கிறார்.

 அடுத்த நாள் ஆறு மணிக்கு தன்னை எல்லா வழக்கையும் தள்ளு படி செய்து விடுவிக்க வேண்டும் என்றும் அப்பா  டீல் போடுகிறார்.இல்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் மிரட்டுகிறார்.

இவன் யார் இவன் பின்புலம் என்ன என்று அப்பாவை பற்றி விசாரிக்கும்  போது அவர் வல்லவர் அசகாய சூரர்,  நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்று எல்லாம் ஒருவர் கதை சொல்கிறார்.  அவன் சிறையில் இருப்பதே அவன் சிறையில் இருக்க வேண்டும் என திட்டம் போட்டதால் தான் இருக்கும் என்று எல்லாம் சொல்கிறார்.

அப்பா ஊர் முழுக்க ஒதுக்கு புறமான இடத்தில் இடம் வாங்கி இருப்பதும் தெரிய வருகிறது. ஆனால் எதற்கு எங்கே எனத் தெரியாமல்  சிண்டை பிய்த்துக் கொள்கிறார்கள்.

இதற்கிடையில் ஆறு மணி கெடு முடிகிறது. நம் வக்கீலின் உடன் பணி செய்பவர்களின்   கார்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும் வழியில் மிலிடரி குண்டுத் தாக்குதல். எல்லாம் அப்பா ஜெயிலில் இருக்கும் போதே. உள்ளே இருப்பவனுக்கு யார் உதவுகிறார்கள் என்று ஒரு பக்கம் விசாரணை நடக்கிறது. அப்பொழுது அப்பா வாங்கிய இடம் எது எனக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் ஒரு இடம் ஜெயிலுக்கு பக்கத்தில். அப்பா சிறைக்கும் அந்த இடத்துக்கும் பூமிக்கு அடியில் லைட் எல்லாம் போட்டு வழி செய்து வைத்திருப்பார்.  

அது வழியே சென்று அவரின் செல்லை பார்த்தால் அப்பா இருக்க மாட்டார். ஜெயிலுக்கு பக்கத்தில் அப்பாவின்  இடத்தை சோதனை போடும் போது அந்த நகரின்  மேயர் அலுவலுக மேப் இருக்கும். மேயர் அலுவலகத்தில் பாம் இருக்கும்.

வழக்கம் போல் அதை செயல் இழக்க வைக்க முடியாது அனைவரையும் வெளியேற்றவும் முடியாது. வக்கீல் என்ன செய்தார்? அப்பா என்ன செய்தார்? யாருக்கு யார் எவ்வாறு பாடம் கற்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.

Law Abiding Citizen என்னும் இந்த படத்தை பார்த்த முடித்த  போது திரைக் கதையின்  ஓட்டை ஓடிசல்களோடு[அதை எல்லாம் சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் போய் விடும் ;) இவ்வளவு விலாவரியாக விமர்சனம் எழுதியுமா என்று நற நற என பல் உரசும் ஓசை காதில் படுகிறது ] எனக்கு ஏனோ "உன்னை போல் ஒருவன்" படமும் நினைவுக்கு வந்தது!


  

Saturday, May 01, 2010

Suraa

முன்னெச்சரிக்கை:
வில்லு, குருவி, வேட்டைக்காரன் எல்லாம் எதிர்பார்த்து சென்றால் பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சும். நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் சுமாராகத் தான் பூர்த்தி செய்கிறது.

கதை: வழக்கம் போல ஒன்றும் பெரிதாக இல்லை. கதாநாயகன் வாழும் யாழ் [கண்டிப்பாக இந்த பெயர் தேவையா?]குப்பத்தை வில்லன் அபகரிக்க முற்படுகிறான். அதை முறியடித்து, அங்கு இருக்கும் அனைவருக்கும் நல்ல வீடு கட்டிக் கொடுத்து விட்டு கல்யாணம் செய்து கொள்கிறார்.  கிளைமாக்சில் ஏன் கல்யாணம் என்றால்  அங்கு இருக்கும் அனைவருக்கும் வீடு கட்டி கொடுத்து விட்டு தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்பது அவர் முடிவு.

விஜயின் அறிமுக காட்சியை விட வடிவேலுவின் அறிமுக காட்சிக்கு அதிக விசில் கைதட்டல். [என்னிடம் இருந்த எக்ஸ்ட்ரா டிக்கெட்டை வாங்கியவர் வடிவேலுக்காகத்  தான் வந்ததாக சொன்னார்.] படத்தின் முன் பாதியில் பெரும் பகுதியும் பின் பாதியில் கொஞ்சமும் வடிவேல் தான் தாங்குகிறார். [சில பழைய காமெடிகளை தவிர்த்திருக்கலாம்]

விஜய் படத்தின் இந்த கதைக்கு இப்படி ஒரு திரைக்கதையே போதும், அதிகம் மெனக்கெட வேண்டாம் என  நினைத்திருப்பார் போல. சில பல பொத்தல்கள். முக்கியமான தருணங்களில் காணாமல் போகும் வடிவேல் ஒரு உதாரணம்.

புது வில்லன். நன்றாகவே செய்திருக்கிறார். எல்லாரையும் அசால்டாக போடுகிறார். வழக்கம் போல விஜயை மட்டும் விட்டு வைக்கிறார்.

இரண்டு தடவை விஜயை பார்த்தவுடன் தமன்னா காதலில் விழுகிறார். இரண்டு தடவை பார்த்தவுடன் காதலா என்று எல்லாம் நாம் கேட்க வேண்டாம். விஜய்யே கேட்டு விடுகிறார். படத்தில் ஒரு இடத்தில் தமன்னா எங்க அப்பா நம்ம காதலுக்கு ஒன்னும் சொல்ல மாட்டார், ஏன்னா அவர் ஒரு டம்மி பீசு என்று சொல்வார், இந்த படத்தில் அவரே டம்மி பீசு தான் என்பது அவருக்கு தெரியுமா?  பாடல் காட்சிகளிலும் அவரைக் காண சகிக்கவில்லை. விஜயின் படங்களில் நன்றாக இருக்கும் கதாநாயகிகள்  கூட  கோரமாகத் தோன்றுவது ஏன் என எனக்கு பிடிபட வில்லை. [முன்பு அனுஷ், இப்பொழுது  தம்மு]  தம்முவுக்கு தம்ஸ் டௌன்! :(

விஜய் சற்றே வெயிட் போட்டு இருப்பது போலத் தோன்றியது.சம்பந்தம் இல்லாமல் வரும் பாடல் காட்சிகளில் டான்சில் பின்னியிருக்கிறார்.சில இடங்களில் நன்றாக காமெடியும் செய்கிறார்.[இதில் ஏதும் நான் காமெடி செய்யவில்லை] கருத்து கந்தசாமி போல கருத்துகள் சொல்லிக் கொல்கிறார். வழக்கம் போல அங்கும் இங்கும் தாவுகிறார். பறக்கிறார்.போலீஸ் வேஷம்,மிலிடரி வேஷம் எல்லாம் போட்டாச்சு, இதில் வித்தியாசமாக என்ன செய்வது என யோசித்து, சர்தார்ஜி கப்பல் அதிகாரி வேஷம் எல்லாம் போடுகிறார். [சர்தார்ஜிகளுக்கு எல்லாம் போராட யாரும் இல்லையா என்ன?] சுனாமி வருது சூறாவளி வருது ரெண்டும் சேர்ந்து வருது என்று எல்லாம் வசனம் கேட்கும் போது சிரிப்பு வருது. அவன் பார்த்தா கடற்கரையே பத்தி எரியும் என்று புகழ் நெடியும் பிரசார நெடியும் அடிக்கும் போது நமக்கு எரிச்சல் பற்றி எரிகிறது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் சுறா சுமார் தான்!

Monday, April 05, 2010

Paiya Punched

Who may love the movie/can watch the movie?
All guys who are the fans of Tamannah
All girls who are the fans of Karthi
All people who love car races.
All people who dont mind wasting 150 minutes.

What is the story?
Well, seems the producer who poured the money dint bother about it, the actors dint bother about it. Why the heck you and I should bother about it.

Few Good Words
In few places, dialogues and screenplay was good. Cinematography,art and songs was good.Songs were a visual treat. ;)

Verdict
Neither a movie that "You should not miss", nor a movie that "You should miss"

Note to
Milind Soman
You could still give lots of heroes a run for the moolah. Please no more villain roles, where you are wasted.
Jagan
We expect more from you. (நாங்க உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர்பார்கிறோம்)
Vishal and other action heroes
Beware, there is competition for you folks![ well, not only just in terms of action ;)]
Tamannah
You do have the "POTENTIAL" to fill in the shoes of simran.[or should i say belt!] you gotta long way to go in dance department.
To me
Not necessary to buy but should start learning to drive a four wheeler.
To Readers/Commentators
All comments related to the previous line or on my driving skills(or lack of it) will not be entertained, but deleted.

Sunday, March 07, 2010

ஜக்குபாய்-விண்ணைத் தாண்டி வருவாயா!

ஜக்குபாய்

நான் பிரஞ்சு படங்களை பார்த்ததில்லை.ஆனால் ஜக்குபாய் பார்த்திருக்கிறேன்.ஆனால் பிரஞ்சு படங்கள் இப்படி இருக்கும் என சத்தியமாய் தோன்றவில்லை. நல்ல வேலை மஹா அவதார் பாபா புண்ணியத்தில் ரஜினி இதில் நடிக்கவில்லை. ஸ்ரேயாவிற்கு அம்மா ஸ்தானத்தில் நடிக்கும் அளவுக்கு கிரணுக்கு வயசுக்கு ஆகி விட்டதா என்ன? அல்ல எனக்கு வயசுக்கு விட்டதா?ஸ்ரேயாவும் அவரின் டப்பிங்கும் சகிக்கவில்லை.கவுண்டமணி இன்னமும் ஹீரோவுடன் படம் முழுக்க வருகிறார். சண்டை எல்லாம் கூட போடுகிறார். ஆனால் காமெடி தான் காணமல் போய் விட்டது.We expect more from you yaa!!

விண்ணைத் தாண்டி வருவாயா!

இன்னமும் படத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வரவில்லை. கௌதம் மேனனின் சிறந்த படம் அல்ல ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த படம்.சிம்பு இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவு மிக இயல்பாய் செய்து உள்ளார். எங்கே சிம்பு ரசிகன் ஆகி விடுவேனோ என்று பயமாய் இருக்கிறது. பாடல்கள் படமாக்கபட்ட விதத்தில் ஆறு வித்தியாசம் கூட தெரிவதில்லை. Mute செய்து பார்த்தால் எந்த பாடல் என்று சொல்வது மிக கடினம்.கதை,திரைக்கதை,கதாநாயகியின் கதாபாத்திரம் ஏன் வசனம் கூட உண்மைக்கு மிக அருகில் உள்ளது!

Thursday, December 31, 2009

சி(னிமா)ல விளக்கங்கள்

முன்னேற்றம் என்றால் என்ன?
ஒரு காலத்தில் Mr X படத்தை குடும்பத்தோடு பாக்க முடியாது.
தனியாத்தான் பாக்க முடியும்.இப்ப எல்லாம் தனியா கூட பாக்க முடியாது.
 
வாழ்க்கை ஒரு வட்டம் விளக்குக
மொக்கையான படத்தில நடிச்சுட்டிருந்த Mr X, நடுவுல சில நல்ல படம் நடிச்சு மறுபடியும் மொக்கை படத்தில நடிக்கிறது தான்.
 
P.S
If you can't guess who is Mr.X, then you are definitely a fan of Mr X.

Wednesday, September 19, 2007

Real அதிரடி Movie

Rajni, Kamal, ManiRatnam, A.R.Rahman, Balachander all coming together for a movie.
Yeah true check out this link. Hope it will have the dialogues of Sujatha!

Tuesday, September 04, 2007

Shivaji-Movie Review

The best review that i came across for the movie shivaji. No one could aptly and subtly describe how the shankar and rajni duo has fared.