Monday, June 25, 2012

சரித்திரக் குறிப்புகள்

பி.குமுன்பே ட்வீட்டப்பட்டிருக்கலாம். இருந்தாலும் வரலாறு முக்கியம் என்பதாலும் பிற்கால சந்ததியினர் படித்து பயன் பெற வேண்டும் என்பதாலும் தஞ்சாவூர் கல்வெடிர்டில் பொறிக்க முடியாத காரணத்தாலும் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

  • நீ குட் மார்னிங் அனுப்பாமல் விடிவதில்லை என் காலை!
  • குட்நைட் என்னும் மெசஜ்ஜில் தான் ஆரம்பிக்கிறது விடியும் வரை தொடரும் நம் மொபைல் அரட்டைகள்!
  • நம்மை பயங்கரமாக கடுப்பேற்றுபவர்கள் மீது நமக்கு கொள்ளைப் பிரியம் வரும் மர்மம் என்ன!

Saturday, June 02, 2012

கன்னம் கன்றிய கவிதைகள்

கவிதைகளின் கதையும் காரணமும்!

ட்வீட்டரில் சொக்கரின் இந்த ட்வீட்டை பார்த்தவுடன் பசங்களுக்கு கவிதை கிறுக்க நான் அவனில்லையே என்று தான் தோன்றியது! பிறகு புரிந்தது இதைப் பார்த்தவுடன்

பி.கு
இனியாவது சத்தியமாக நம்புங்கள்! இங்கு நான்  இரகசிய சினேகிதிக்காக கிறுக்கியதும் சரி இரகசியமில்லா சினேகிதிகளுக்காக கிறுக்கியதும் சரி கற்பனை கற்பனையே

ட்வீட்-1
ரோட்டில் ஒரு ஜோடி, சிரித்தபடிதான் நடந்துகொண்டிருந்தார்கள், திடீரென்று அவள் அவன் கன்னத்தில் ஓர் அறை, பார்த்தவர்கள் வெலவெலத்துப்போனோம் :>

ட்வீட்-2
நடு ரோட்டில் கன்னத்தைத் தடவிக்கொண்டு அந்தப் பையன் பரிதாபமாக நின்ற காட்சியை வைத்து @zenofzeno ஏதாவது கவிதை எழுதிவிடுவார் :>
கன்னம்
கன்றியதற்கா
கவிதை
கேட்கிறார்கள்
கல்நெஞ்சமுமில்லா
கொடியவர்கள்!

கவலையில்லை
கலங்காதே
களிப்புடனே
கிறுக்குவோம்
கலக்குவோம்!
oOo

உன்
உதடுகளுக்கும்
விரல்களுக்கும்
வித்தியாசமில்லை

முத்தத்திற்கும்
மொத்திற்கும்
மட்டுமெதற்கு!
oOo

கையும்
கையும்
கலந்து
காலாற
காற்றையும்
கடலையையும்
கடக்கும்
காதலர்
கட்டியணைப்பதும்
கைநீள்வதும்

காலத்தின்
கோலமய்யா
கண்டுகொள்ளாதீர்!
oOo

கைகோர்த்தவள்
கன்னத்தை
கன்னாபின்னாமாக்குவதற்கு
கண்டவர்
கொள்ளிக்
கண் தான்
காரணம்
வேறில்லை
கண்டுக்கொள்!
oOo

விரலும்
விரலும்
உரசி
விளையாடிய
விநாடிகளில்
உணரவில்லை
உன்
விரல்களின்
வலிமையை

உணர்ந்தேன்
வலித்தபோது!
oOo

உனை
சிரிக்க
வைத்தேன்
நான்

எனை
சந்தி
சிரிக்க
வைத்தாய்
நீ!
oOo