Thursday, December 31, 2009

என்ன செய்ய?

வரிசையில் வரா
வீணர்களை
வசைபாடவா
உதைக்கவா?

சி(னிமா)ல விளக்கங்கள்

முன்னேற்றம் என்றால் என்ன?
ஒரு காலத்தில் Mr X படத்தை குடும்பத்தோடு பாக்க முடியாது.
தனியாத்தான் பாக்க முடியும்.இப்ப எல்லாம் தனியா கூட பாக்க முடியாது.
 
வாழ்க்கை ஒரு வட்டம் விளக்குக
மொக்கையான படத்தில நடிச்சுட்டிருந்த Mr X, நடுவுல சில நல்ல படம் நடிச்சு மறுபடியும் மொக்கை படத்தில நடிக்கிறது தான்.
 
P.S
If you can't guess who is Mr.X, then you are definitely a fan of Mr X.

பாக்காதே என்ன பாக்காதே

பார்த்தால் பார்வையில்
எரிக்கிறாள், பார்த்தது
அவளையல்ல ஆகையால்!

Saturday, December 19, 2009

நீ வருவாய் என

எப்போது எப்படி என்று தெரியவில்லை அவளை எனக்கு பிடித்து விட்டது. அவளுக்கும் என்னை  பிடிக்கும்  என்று  தான்  தோன்றியது ஆனால்  அரண்டவன்  கண்ணுக்கு  இருண்டது எல்லாம்  பேய் என்பது போல் அது என் பிரமையா எனவும் தோன்றியது. 
தினமும் அலுவலகத்தில் பார்த்து கண்ட கதைகள் பேசினாலும் ஏனோ இதைக் கேட்க மட்டும் வாய் வரவில்லை.
விஜய் தான் உதவிக்கு வந்தார். 
உனக்கு என்னை பிடிக்கும் என்றால் அவதார் படத்திற்கு டிக்கெட் அனுப்பு இல்லையென்றால் வேட்டைக்காரன் படத்திற்கு டிக்கெட் அனுப்பு என்று வந்த   குறுந்தகவலை அந்த இரவுஅனுப்பி வைத்தேன். சாதா பார்வர்ட் என்று நினைக்க கூடாது என , "அவதாரா வேட்டைகாரனா என்று நன்றாக யோசித்து பதில் சொல்லு என்று மேலும் ஒரு குறுந்தகவலை அனுப்பி வைத்தேன்.
நாளை நேரில் என்று பதில் வந்தவுடன் எனக்கு புரிந்தது அவளுக்கு புரிந்து விட்டது என.
ஆவலுடன் அலுவலகம் அடைந்த என் கையில் வேட்டைக்காரன் டிக்கெட்டை தந்தாள்.இரண்டு இருந்தது.
 பின்குறிப்பு
இதன் Sub Text புரியாதவர்களுக்காக இந்த வரி.
உன்னோடு என்றால் வேட்டைக்காரன் படத்துக்கும் வரத்தயாராக இருக்கிறேன் என்று அவள் சொல்லிக்  கொண்டிருந்த  போது நான் பறந்து கொண்டிருந்தேன்.

Thursday, December 17, 2009

அன்றும் இன்றும் மனிதன் மாறிவிட்டானா?

ரொம்ப காலமாகவே படங்களை நியாயமான முறையில் தான் பார்த்து வருகிறேன். MoserBaer-ம் Big Flix-ம் தான் காரணம்.Pirated DVD களின் தரமும், Online Download Speed-ம் மற்ற துணைக் காரணங்கள்.

சில நாட்களாய் புத்தகங்களிலும் இதே நிலைமை. எல்லாம் காசுக்கடக்கமான புத்தகங்கள். அடங்க வில்லையெனில் ஒழுங்காக வாங்கியவர்களிடமிருந்து ஒசி வாங்குகிறேன். அனாயசமாக Online-ல் படிக்க முடிந்தாலும் கண்களை கருத்தில் வைத்து Avoid செய்து விடுகிறேன்.

என்னை மாதிரி ஜீவன்களுக்காகவே LandMark-ல் தமிழ் ஆங்கிலம் என வித்தியாசம் இல்லாமல், எவ்வளவு குறைவான காசுக்கு வாங்கினாலும், Free Shipping மற்றும் Discount உடன் Online-ல் புத்தகம் விற்கிறார்கள், அருமையான Packing, சரியான Delivery உடன்.[இதற்கு முன் ஒரு புத்தகத்தை 58-கு வாங்கினேன்]

Site-ல் Filterகள் எல்லாம் போட்டு,தேடுவதற்கு மேலும் வசதி செய்யலாம். இவர்கள் தரும் போது கிழக்கில் ஏன் தருவதில்லை?

எங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஒரு கடையில் 20% தள்ளுபடி இருந்தும், கேட்ட புத்தகங்கள் மெயின் கடையில் இருந்து தருவிக்கிறோம் என்று சொல்லி டபாய்த்ததால், மீண்டும் LandMark Site-ல் Land ஆனேன்.

இதற்கு இவ்வளவு அறிமுகம் என்றால், குறுந்தொகை ஒரு எளிய அறிமுகம் என்ற புத்தகத்தை வாங்கி படித்துக் கொண்டிருக்கிறேன் என்பதை சொல்லத்தான். :) :)

சுஜாதா எழுத்தைப்ற்றி புதிதாக பிரஸ்தாபிக்க எதுவுமில்லை.
ஆரம்ப பக்கங்களே ஆபாரம் தான், ஆனால் மூன்று பக்கங்கள் தாண்டும் முன்னரே மூச்சு மூட்டுகிறது. கனமான சாரம் தான் காரணம். புத்தகமும் Hard Binding இல்லாமல் PaperBack இருந்திருக்கலாம்.

பாடல்களை விளக்கம் இல்லாமல் படித்தால் ஓன்றும் விளங்குவதில்லை.
சங்க கால தமிழுக்கும் சமகால தமிழுக்கும் கால இடைவெளி பல மாற்றங்களை கொண்டு வந்திருந்தாலும், மனிதனின் அகப் பொருள் வாழ்வில் அன்றும் இன்றும் அதே பிரச்னைகள் தான்!

Three Mistakes of the Day

During the rainy season,
  1. Not owning an umbrella.
  2. Not wearing a rain coat but a jeans. 
  3. Above all, getting up late, missing the company shuttle that stops just across the door.
Or
Should i say going to office on a rainy day is the one biggest mistake of the day :)

Monday, December 14, 2009

Best Laid Plans

Is there such a thing called as very good plan?

How many of us, do really follow our childhood dreams, ambitions? Not many i would say.

May be we were too young and ignorant too know what exactly we wanted to know, we were not aware of strengths, weakness, opportunities and threats. Do we know that atleast now?

How many of us have even pursued our grown up ambitions and dreams? say your career choice during college? say your career plan after college? again not many i would say!

Forget career choices, tell me one thing for which you planned, with risk factors zeroed in, considered mitigation plan and back up plans, dreamed of all the worst case scenerios and just went according to the plan? not one i would say! Even just going to hometown doesnt happens according to the plan.

well then, why is that most of the organizations and individuals plan? that too long term, mid term short term. Usually for most of them, plan tops, it's the execution that topples.

May be that's what differentiates successful and not so unsuccessful people. Successful people, plan and stick to their plans.

Alternatively, you can go along in life as it goes on and tell everybody that was the plan![when managers tells, "you are ten days behind the schedule according to the plan", oh yeah boss that was the plan.]

N.B
I never planned to blog this post, and there are many posts that i have planned but havent blogged

just a travel in the memory lane after meeting some school folks.

Monday, December 07, 2009

காணாமல் போனவர்கள்

குழந்தைகளுக்கான  கடைகளில்
காணாமல் போய் விடுகிறார்கள்
பெரியவர்கள்!