சில பல வருடங்களுக்கு முன் கல்லூரியில் முதல் நாள் காலடி எடுத்த வைத்த போது இரண்டாவதாக நான் பார்த்த பெண் அவள். இது ஒரு ரைமிங்க்காக எழுதப்பட்டது அல்ல. நிஜமான நிஜம்.
வெள்ளை முகம், இது போதாதா ஆவென வாய் பிளந்து பாக்க, ஆனால் அண்ணாந்து பார்க்க வேண்டிய அளவு உயரமும் இல்லாமல் குள்ளமும் இல்லாமல் அளவான உயரம்.[கூடைப் பந்து கூட விளையாடுவாள்!] அப்புறம் நீளமான முடி. என பராக்கு பார்க்க பல இது போதாதாக்கள்.
முதல் வருடம் முழுவதும் அவள் பக்கத்திலே உக்கார்ந்தவன்.
கடைசி வருடம் முழுக்க அவள் கூட சுற்றியவன்
எல்லா வருடமும் அவள் பின் சுற்றியவர்கள், பலர்
வேலைக்கு சேர்ந்த இடத்திலும், எங்க காலேஜ் பொண்ணு என்னதான் பாக்கும் என சுற்றியவர்களும் உண்டு.
பத்து வார்த்தைகளுக்குள் சொல்ல வேண்டுமென்றால், பிகருக்கு பக்த கோடிகள் மிக அதிகம், அடியேன் உட்பட
அப்புறம் அவள் மாற்றலாகி போன பின், என் மனதில் அவளுக்கு இடம் இல்லை. கியூவில் இருக்கும் மற்ற மக்களுக்கும் இடம் கொடுக்க வேண்டுமல்லவா.
ஒரு நாள் வழக்கம் போல வெட்டியாக ஃபேஸ்புக்கில் மேயும் போது சாபக்கேடான சாப்ட்வேர் காரணமாக பிரண்ட்ஸ் சஜஷனில் அவள் பெயர்! ப்ரொபலைப் போய்ப் பார்த்தால் கணவனை கட்டிய படி போட்டோ.
வட போச்சே என்ற வருத்தத்தில் மேலும் பார்த்தால் என்னைப் போன்ற பக்தர்களை விட நாலே வருடம் பெரிய அக்கா. ஆடிப் போய் விட்டேன்.
இவருக்கா இவ்வளவு அக்கப் போர்[நம்மை விட பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டுமல்லவா?]
இப்படி மனதை மெர்சலாக்கும் படங்கள், வாழ்க்கையை உய்விக்கும் செய்திகள் அனைத்தும் கூகிள் கூட்டலில் கஷ்டமின்றி கிடைக்குமென்றால் ஃபேஸ்புக் ஃபேஸ் இல்லாமல் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.பிக்காஸா செட்டிங்க் மாற்றத்தை மனதில் வைத்துப் பார்த்தால் கூகூவிற்கு பிரகாசமான எதிர்காலம் என்று தான் தோன்றுகிறது.
பி.கு
இந்த பதிவை ட்வீட்டுவதால் டிவிட்டரின் தீர்க்காயுசை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம்

5 comments:
சில பல வருடங்களுக்கு முன்-னு சொன்ன எப்பிடி? சிலவா? பலவா? கரெக்டா சொல்லுங்க, உங்க பருவத்த நாங்க தெரிஞ்சிக்க வசதியா இருக்குமில்ல :))
Zenoooooo - What is four years in a lifetime ???
Entha college saaar neenga ?????
@Venkat, சில அப்படின்னும் சொல்லலாம், பல அப்படின்னும் சொல்லலாம். எல்லாம் மனசைப் பொருத்தது. இளம்பருவம் தான்!
@Ramesh, Yeah yeah four years is nothing. VIT :) Why Why?
:-) :-) என்ன ஒரு அலசல்! என்ன ஒரு அலசல்! :-D
ஹலோ பாஸ் ... உங்க லிஸ்ட் ரொம்ப (ஸ்ட்ரோங்) or (லாங் )ah ...
Post a Comment