Sunday, November 18, 2018

கவிஞ்சரும், கவிஞ்ஜாயினியும்!

என்னுடைய 89 அழகிய ராட்சசிகள் கவிதை நூலை வாசித்ததில் இருந்து, இப்பொழுது எல்லாம் ஏன் கவித்துவமான கவிதைகள் எழுதுவதில்லை என்று வாசகிகள் மடல் மேல் மடல் எழுதுகிறார்கள்.

வாசகிகளா என்றால், வாசகிகள் எல்லாம் இல்லை. ஓரே ஒரு வாசகி சகதர்மிணி மட்டும் தான்! கவிஞ்சர் என்று ஆன பின் இவ்வளவு கூட மிகைப் படுத்த கூடாதா என்ன?

இப்படி கேட்டுக் கொண்டும்,  இந்த 96 அந்தாதி பாடலையும் , ரசம் செய்து கொண்டிருந்த போது காதல் ரசம் சிந்தும் பாடல்களை உங்கள்குழாயில் (YouTube)  (தமிழ் கவிஞ்சர்ரின் தமிழ் படுத்தல், சொல்ப அட்ஜ்ஸ்ட் மாடி)  கேட்டதன் விளைவாக நீ(ங்க) என்னடா (ங்க) எழுதுவது? நானே கவிஞ்ஜாயினி ஆகிவிடுகிறேன் என்று அவர் (கொஞ்சம் நானும்) எழுதிய குபீர்(பீர் எல்லாம் இல்லை)  கவிஜ , இதோ உங்கள் பார்வைக்காக!

(எச்சரிக்கை: கஜா புயல் காரணமாக வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த சமயத்தில் புனையப்பட்டது)

(அகரம் இப்போ சிகரம் ஆச்சு, தகரம் இப்போ தங்கம் ஆச்சு மெட்டில் நீங்களே படித்து பாடிக் கொள்ள((ல்ல)வும்) ) (இங்கே லவ்வும் என்று படித்தவர்கள்

இட்லி எப்போ தோசையாகும்?
பூரி எப்போ சப்பாத்தியாகும்?

போர்வை எப்போ மெத்தையாகும்?
பாய் எப்போ சோபா ஆகும்?

தோசை எப்போ இட்லியாகும்?
சப்பாத்தி எப்போ பூரியாகும்?

மெத்தை எப்போ போர்வை ஆகும்?
சோபா எப்போ பாய் ஆகும்?

பால் எப்போ தயிர் ஆகும் ?
தயிர் எப்போ மோர் ஆகும்?

தயிர் எப்போ பால் ஆகும்?
மோர் எப்போ தயிர் ஆகும்?

அப்படி எல்லாம் ஆகாதுடா வெண்ணெய் என்று திட்டியவுடன் கவிஜ அரங்கேற்றும் படலம்  சண்டையுடன் முடிந்தது!