Thursday, January 27, 2011

R.S.S

RSS என்றால் மசூதியை இடித்தவர்கள் மட்டும்தான் என இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். பார்த்தால் பாவிகள் காந்தியையும் கொன்றிருக்கிறார்கள் என்பதை பாரா எழுதிய ஆர்.எஸ்.எஸ் படித்து தான் தெரிந்துக் கொண்டேன்.


அது மட்டுமல்ல. ஆர்.எஸ்.எஸ் பிரமாணர்களின் கூடாரமல்ல, சாதியை ஒழிக்க விரும்பியவர்கள். கோவாவை கொண்டு சேர்த்ததில் முக்கியப் பங்காற்றியவர்கள்.தேசபக்தி நிரம்பியவர்கள்.கலாச்சாரக் காவலர்கள்(!) எனவும் கண்டு கொண்டேன்.

மோடியின் அனைத்து செய்கைகளும் சுமாராக புரிந்தது. எடியூரப்பா புரியவில்லை. அவர்களின் மிகப்பெரிய சாபக்கேடு இவர்தான்!

இயக்கமென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இவர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். வெவ்வேறு கொள்கைகளுக்காக வெவ்வேறு கிளை நிறுவனங்களை நிறுவும் புத்திசாலித்தனம் தான் என்ன!

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வரலாற்றை அதன் பின்புலத்தோடும்[பிரிவினை, காந்தி] பல்வேறு காலக் கட்டங்களில் அவர்களின் செயல்பாட்டையும் நிலைப்பாட்டையும் படிக்கும் போது அந்த இயக்கத்திற்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும் முக்கியத்துவத்தையும் நாம் தருவதில்லை என்று தான் தோன்றுகிறது.

இவர்களின் கட்டுக்கோப்பு, கொள்கைகள் மற்றும் மதச்சார்பு தான் இவர்களின் பலமும் பலவீனமும்! மதச்சார்பு மட்டுமில்லாமலிருந்தால் எனத் தோன்றும் அதே சமயம் மதச்சார்பு இல்லையென்றால் இயக்கம் நீர்த்து போகும் என்னும் உண்மை உரைக்கிறது. மதச்சார்பு கூட இவர்களுக்கு கிடையாது ஹிந்துச்சார்பு தான் என்றும், ஹிந்து என்பதற்கும் இவர்கள் தரும் வியாக்கியானம் எத்தனை ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்குத் தெரியும் எனத் தெரியவில்லை.அது எல்லாம் அவர்களுக்குப் புரிந்து நமக்கும் புரியும் முன் கரசேவகர்களின் சேவை கண் முன் நிற்கும்!

ஆர்.எஸ்.எஸ் தவற விட்ட தருணங்களையும் தெரிந்தே செய்த தவறுகளின் பட்டியலையும் குலைநடுங்கச் செய்யும் கோர முகத்தையும் காணும் போது ராகுல் காந்தி தான் இந்த இயக்கத்தின் தீவிர சக்தியை நன்கு புரிந்து வைத்திருக்கிறார் எனவும் தோன்றியது. ;)

அதேசமயம் புத்தகத்தை முடித்த பின்னர் ஆர்.எஸ்.எஸ் மீது மதிப்பு கூடவில்லையென்றாலும் வெறுப்பு குறையும். யார் படிக்க வேண்டுமோ இல்லையோ ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ் காரனும் படிக்க வேண்டிய புத்தகம்.

இது மாதிரியான புத்தகம் எல்லாம் என் தேனீர் கோப்பைக்கானதல்ல என நினைத்திருந்தேன். ஆனால் என்னையும் விடாமல் படிக்க வைத்தது! இதோ இதை எல்லாம் எழுதவும் வைத்தது.

மதம் மதம் மேலும் மதம் என்று வைத்திருக்கலாம் என்பது அடியேனின் எண்ணம்.

6 comments:

Ramesh said...

Truly multifaceted you are zeno. Nice post straying into the political arena.

Organisations like the RSS polarise people. Either they are extremely good or extremely bad. In reality they are neither. They do a lot of good they are usually the first to reach and start relief in most disasters and as you observed, instill discipline, service etc. However, there's the not so good side too - religious bias at best and intolerance at worst. Political discourse world over has become extreme - balance in recognising the good while shunning the not so good would do us all well.

zeno said...

As i said, I never thought i will like this book, the style was riveting!Interesting read, you should give it a shot. Easy to order online. Lots of good kids books too from the same publisher ;)

I got a feeling that they have gone away from the founding principles or havent reinvented themselves to modern times. More like good things not harnessed properly.

chennaigirl said...

Intha organisation pathi bits and pieces la padichirukken, u know its more conflicting. I think its the selfish people at the vertex who lead them in the wrong path.

zeno said...

@CG everyone is selfish. I recommend reading :)

RamMmm said...

A good very high level dissection of the RSS. Will try to get this book and most importantly, read. :-)

The clue is that they haven't reinvented themselves as you say and looks like they are doing something towards it. They have a very good discipline in the rank and file and probably when the folks move over to the political mainstream via BJP, they are lured by what power and money is.

Good one.

zeno said...

If the review was any good the credit goes to the book :)
I have lots of such good books to recommend ;)