Mamu Arrears வச்சா இப்படித் தான் என்று கடைக்கு கூட வந்த நண்பனின் நக்கல்,
கடை கடையாய் ஏறி இறங்கி,தேடித் தேடி convent சிறுவன் சுமக்க முடியாத அளவு college book களை சுமந்து வீடு வந்து சேரும் போது,
சொந்தமா பழைய Book stall வைக்க போறியா என்ற எதிர்த்த வீட்டுக்காரரின் எகத்தாளம்,
Book எல்லாம் பத்திரமா வை அப்படினு எவ்வளவு புத்தி சொல்லி இருப்பேன்,கேட்டியா சொன்ன பேச்சு கேக்கலேன்னா இப்படித் தான் என்று தந்தையின் திட்டு,
"பையன் படிக்கின்றான்" என்று செல்வியை மட்டும் இன்றி தூக்கத்தையும் தியாகம் செய்து காபி போட்டுக் குடுத்து, alarm வைத்து எழுப்பிய போதும் எழாமல் அம்மாவிடம் செய்த அழும்பு,
படிக்கிறப்போ proper-a perfect-a படிக்கிலேன்னா இப்படித்தான் என்ற அக்காவின் advice,
"எல்லாம் நல்ல படியா நடந்தா உனக்கு தேங்காய் உடைக்கிறன்", என்று தெருக்கோடி பிள்ளையாருடன் போட்டுக் கொண்ட agreement,
all the best என்று கூட வந்தவரின் வாழ்த்து,
இவ்வளவும் இதற்குத்தானா என்று என் மேல் எரிச்சல் வந்தது,
campus interview-ல் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடை தெரியாமல்,பரிதாப பார்வையுடன் இப்படி எல்லாம் ஒரு காலத்தில் உன்ன கேள்வி கேட்டிருந்தா இப்படி இங்க உக்காந்து என்ன damage பன்னுவியா என்று அவன் மனசாட்சி திட்டியது காதில் விழுந்த போது!!!
4 comments:
Ha ha hah ..nalla ezhudhareenga...romba vaasthavam
nanri mikka nanri, appo appo vanga!!!
matha post ellam kuda padichu comment panna innum nalla irukkum
Enna Zeno ezhudha maatengareenga...
hi cowey,
Nice to see that you visit the blog....
Sorry for not writing....
Will do blog shortly...
Post a Comment