Sunday, June 07, 2009

தூங்காத விழிகள்!

வெகு நாள் கழித்து சொந்த ஊர் பயணம். வழக்கம் போல் தனியாக இல்லாமல் சினேகிதர்களோடு பயணம்.[கவனிக்க,இரகசிய சினேகிதி எல்லாம் அல்ல].ஆனால் எங்கள் ஊர் பேருந்தில்,ஆச்சரியமாய் சற்றே சுமாராய் ஒரு பெண்.அதுவும் ஒரு பையனுடன்! தெரிந்த பெண் என்று மனம் அடித்துச் சொல்லியது.ஆனால் ஞாபகத்திற்கு வராமல் மக்கர் செய்தது.அந்த பையன் நிச்சயமாய் அண்ணன் அல்ல தம்பியும் அல்ல.இருவரையும் சேர்ந்து பார்த்தால் நல்ல அபிப்ராயம் தோன்றவில்லை.[பெண்ணைத் தனியாக பார்த்தால் மிக நல்ல அபிப்ராயம் தோன்றியது.] இவர்கள் மீது ஒரு கண் என்ன இரண்டு கண்ணும் வைப்போம் என்று முடிவு செய்தேன்.[பையனைத் தனியாக பார்த்தால் சுத்தமாக நல்ல அபிப்ராயம் தோன்றவில்லை என்பது தான் என் முடிவுக்கு காரணம்]. பயணம் தொடங்கிய பின் கொஞ்ச நேரம் வரை பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக நிஷ்காம யோகத்தில் மூழ்கினர்.திரும்பி அந்த இருவரையும் பார்த்த எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இருவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர், நல்ல விதமாக.
ஊரில் இறங்கும் போது நண்பன் என்னைப் பார்த்துக் கேட்டான். கண் எல்லாம் என்ன இவ்வளவு சிகப்பாக? தூங்கவே இல்லையா நீ!

No comments: