Monday, January 25, 2010

தூக்கத்தைத் திருடியவள்

காதோரக் கிசுகிசுப்பில்
கனவு கலைந்து

மெய்யெங்கும் மேய்ந்து
கண்ணாமூச்சி காட்டியவளை

கைகளால் கட்டியணைக்க
உணர்ச்சியின் உச்சமாய்

உள்ளங்கையெல்லாம் உதிரம்
கொசுவைக் கொன்றபின்!

Trainer- 6 Can's and Can't

Trainer gets the questions well in advance.
Trainer can get the key and solutions too well  in advance.
Trainer can refer study notes/materials.
Trainer can take his time to solve the questions
Trainer can afford to make mistakes and correct it.
Trainer can skip the questions.[ and still got nothing to lose!]

Trainer can't afford to come late to class.
Trainer can't afford to sleep/message in class.
Trainer can't afford to guess the answers.
Trainer can't afford to know only one way to solve the questions.
Trainer can't afford to appear dumb or stupid.
Trainer can't afford to look younger than the trainees of the class :):)

N.B
1)Good coaches need not be good players. Good players need not be good coaches.
2)After being on both the ends of the spectrum, Trainee and trainer of competitive exams.

Thursday, January 21, 2010

கலிகால கும்பகர்ணன்கள்

உள்ளம் உராயுமளவு
உடல் உரச
தோளோடுதோள் தீண்ட
தூக்கத்தில் தானாக
தலைசாய்ந்த போதும்
விலகினேன் ஒதுங்கினேன்
பேருந்திலிருந்த பக்கத்து
பயணியிடமிருந்து!

Friday, January 08, 2010

நீ தானா அந்தக் குயில்!

ஏங்க பஸ்ல ரேடியோவோட கூடவே, "பாட்டு எல்லாம் பாடிட்டு வந்தது நீங்க தானா?"

ஆமா, ஏன் கேட்கறீங்க?

நிஜமாவா என்னால நம்பவே முடியலை.

ஏன் நம்ப முடியலை?

இல்லை, உங்க குரல் இவ்வளவு கேவலமா இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை! 

Who the Hell is Responsible?

"Damn that guy, he really spoiled my mood"

"I am gonna kill him, It was due to him I did not get the promotion"

"How dare he? How can he treat me like this?

"How can he do this to me? I had so much trust and faith on him!"

How many times have you felt this way? How many times have you heard any of your friends feel this way?

Is it fair enough to blame others? Does it makes any sense? Honestly, No

It is always you, who let your mood to be spoiled by you.

It is always you, who was lethargic, din't do the right things and you are the reason why you did not get the promotion.

It is always you, who made him to treat you that way.

It is always you, who misplaced your trust.

If you think deep enough, this could be applied to all situations and at the end of the day, it is always YOU and ONLY YOU, who controls your destiny.

p.s
Inspired by quotes from Seven Habits of Highly Effective People

"As Eleanor Roosevelt observed, "No one can hurt you without your consent." In the words of  Gandhi, "They cannot take away our self respect if we do not give it to them." It is our willing  permission, our consent to what happens to us, that hurts us far more than what happens to us in the first place."

Sunday, January 03, 2010

தமிழில் ஒரு சந்தேகம்

இந்த வார  ஆனந்த  விகடனில் பிரபாகரன் 25 ப.திருமாவேலன் அவர்கள் எழுதிஉள்ளார்.

கட்டுரையின் ஆரம்பத்தில் ," தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்கு கிலியுட்டி வரும் புலிப்படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக் காட்டிய மனிதர்." என்று  எழுதி உள்ளார்.

ஆனால் முடிவில் "மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன்  ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு  எதாவது ஆனால் உடனே உடலை எரித்துவிட உத்தரவிட்டுருந்தார் . எதிரியின் கையில் தன் சம்பல் கூட கிடைக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்.

"அழைக்கப்பட்ட",  "கிலியுட்டிய" அல்லது  "கிலியுட்டி வந்த " என்று அல்லவா எழுதி இருக்க வேண்டும்?

இல்லை என்றால் கடைசியில் "இருக்கிறார்" என்றல்லவா எழுதி இருக்க வேண்டும்?