Friday, November 26, 2010

ஓய் ஓய்

காலையில் படுக்கையை விட்டு எழும் போது யாரெனும் அவ்வளவு பிரெஷ்ஷாக இருப்பார்களா எனத் தெரியவில்லை ஹீரோயினாக நடிக்கும் முதல் படத்தின் முதல் காட்சியில் ஷாமிலி தெரிகிறார்.அப்படி ஒரு மேக்கப். மேக்கப்புக்கு மட்டும் பேக்கப் சொல்வாரெனில் அனுஷ்காவை அம்போவென விடவும் ஷாமிலிக்கு சிம்மாசனமும் போட நான் ரெடி!

எதிரும் புதிருமான சித்தார்த்தும் ஷாமிலியும் தொலைபேசியில் பேசும் ஆரம்ப காட்சியைப் பார்த்து அளவிலா ஆர்வம் கொண்டு அகப்பட்டேன் நான்..அந்தோ பரிதாபம்! வழக்கமான காதல் வில்லனாய் கேன்சர் என வீணாய்ப் போன கதை பாழாய்ப் போன நேரம்!

சைல்ட் ஆர்ட்டிஸ்ட் என்றும், அஞ்சலி அஞ்சலி என ஷாமிலியைக் கலாய்ப்பது, கடியான காமெடியைக் கூட கதையோடு கலப்பது, தந்தையின் சாவிலும் கண் கலங்காமல் கிண்டல் பேச்சு பேசும் சித்தார்த் ஷாமிலிக்கு கேன்சர் என்றவுடனே கதறுவது பர்த் டே கிப்ட் கொடுக்கும் காட்சியை கிளைமாக்ஸில் மீண்டும் கனெகட் செய்வது என சிறப்பான சமாச்சாரங்கள் படத்தில் சில உண்டு. நெப்பொலியன், வினாயக்கடு படத்தின் ஹீரோ இவர்களோடு சித்தார்த்தின் ஐடியா பிரமொஷனும் அவ்வப்பொழுது படத்தில் உண்டு.[அதுவும் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் இருக்க வேண்டும் என்ற ஷாமிலியின் ஆசையை நிறைவேற்று ஐடியா மூலம் ஐடியா வருவது எல்லாம் உண்மையிலேயே செம ஐடியா தான்!

இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒருவர் கல்லூரியில் படிக்கும் ஷாமிலிக்கு நண்பர் என்பது, அவ்வளவு ஸிட்ரிக்ட்டான ஸ்ட்ராங்கான ஷாமிலி சட்டென சித்தார்த்தை வாரிசாக இன்ஸுரன்சில் போடுவதும், அவரோடு காசிக்கு கிளம்புவதும், கிடைக்கும் காசுக்கு ஆசைப்படுவதும், ஹெலிகாப்டரில் ஏறுவதும், பணத்தை பறக்க விடுவது என பலகீனமான சமாச்சாரங்கள் நிறைய நிறைய உண்டு.

படத்தில் ஷாமிலியின் வீட்டுப் பிரச்னையை சித்தார்த் தீர்த்து தான் மிகப் பணக்காரன் என்பதை எல்லாம் மறைப்பதை எல்லாம் பார்க்கும் போது கஜினி ஞாபகத்திற்கு வருவதையும்  கிளைமாக்ஸில் பெஞ்சில் சித்தார்த் பழைய கதையை சொல்லி ஷாமிலியின் நினைவாய் மழைக்கு காத்திருக்கும் போது 7 ஜி ரெயின்போ காலனி நினைவுக்கு வருவதும் தவிர்க்க முடிவதில்லை. சோகமான முடிவின் காரணமாய் மனம் கனமாவுதும் தவிர்க்க முடிவதில்லை.

பி.கு
படத்தில் ஷாமிலி சித்தார்த்தை கூப்பிடுவது எல்லாம் ஓய் ஓய் என்று தான்! ஒரு நிமிடம் என்னையும் யாரோ ஓய் என கூப்பிடுவது போலத் தோன்றுகிறது!

3 comments:

RamMmm said...

ஓய் ஓய்! அனுஷ்காவை இப்படி கவுத்துட்டியே! :-( அனுஷ்காவை தலைல தூக்கி வெச்சு கொண்டாடின zeno, அதிக பிரசங்கியா நடிச்சு ஒரு காலத்துல பேர் வாங்கின ஷாமிலியை, ஒரே படத்துல அந்த positionக்கு அனுப்புறதை வன்மையாக கண்டிக்கிறேன். :-) அப்டியே ஊனி உருகி படத்தை பாத்த மாதிரி தெரியுது? என்னமோ போ! சரியில்ல.

RamMmm said...

ஆனாலும் ராத்திரி 1 மணி வரைக்கும் உக்காந்து விமரிசனம் எழுதினத்துக்கு இருக்கணும் ஒரு பற்று. :-D அப்புறம் ஆபீஸுக்கு லேட்டா வந்தா, மேனேஜர் கேக்க மாட்டாறா?

zeno said...

கேரளா என்னை கமான் கமான் என கூப்பிடுகிறது என்ன செய்ய. வாழ்க்கை நிலையற்றது என் இதய சிம்மாசன பதவியும் அப்படித் தான். மனம் ஒரு குரங்கு என சும்மாவா சொன்னார்கள்!

ஆமா மனசு சரியில்ல :)

படம் பாக்க பாக்க எடுத்து வச்ச நோட்ஸ்! அதிக நேரம் எல்லாம செலவாகலை.

The fact is nowadays i have been spending too much time in office(qualitatively too), more like good old days :( [Hence the late night blogging at home!]