Sunday, January 03, 2010

தமிழில் ஒரு சந்தேகம்

இந்த வார  ஆனந்த  விகடனில் பிரபாகரன் 25 ப.திருமாவேலன் அவர்கள் எழுதிஉள்ளார்.

கட்டுரையின் ஆரம்பத்தில் ," தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்கு கிலியுட்டி வரும் புலிப்படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக் காட்டிய மனிதர்." என்று  எழுதி உள்ளார்.

ஆனால் முடிவில் "மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன்  ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு  எதாவது ஆனால் உடனே உடலை எரித்துவிட உத்தரவிட்டுருந்தார் . எதிரியின் கையில் தன் சம்பல் கூட கிடைக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்.

"அழைக்கப்பட்ட",  "கிலியுட்டிய" அல்லது  "கிலியுட்டி வந்த " என்று அல்லவா எழுதி இருக்க வேண்டும்?

இல்லை என்றால் கடைசியில் "இருக்கிறார்" என்றல்லவா எழுதி இருக்க வேண்டும்?

3 comments:

RamNarayanS said...

ஏங்க, சும்மா இருக்க மாட்டீங்களா? அவுங்களே குழம்பிப்போயிருக்காங்க! இப்படி எல்லாம் கேக்கப்படாது.

-குட்டையிலிருக்கும் மட்டையை வைத்து குழப்புவோர் சங்கம்.

Appu said...

:) எதோ சின்ன சந்தேகம்! அறிவை Develop பண்ணலாம்னா விட மாட்டீங்க போல :)

RamNarayanS said...

அவரோட Proof-reader இதை உட்டுட்டார் போல.

Moreover the sentence itself is ambiguous to interpret. If the writer believes Prabhakaran is not dead, but has gone into hiding, the last statement could be interpreted as Prabhakaran's instructions before he disappeared, but his current status is not known.