Saturday, April 23, 2011

கனியா காயா?

முன் சீட்டில்
மோனாலிசா இருக்க
முகம் தெரியாதவளோடு
மொபைலில் மொக்கை
போடுவது
கனியிருக்க
காய் கவர்ந்தற்று!

Saturday, April 16, 2011

கறுப்பு வெளுப்பு

கறுப்பு ஐபோனில்
வெள்ளை ஸ்கீரினாய்

கறுப்பு உடையில்
அவள்!

பி.கு
எவ்வளவு நாள் தான் கருவானத்தில் வெண்ணிலவு, கறுப்பு உடையில் அவள் அப்படின்னு அரைச்ச மாவை அரைக்க?

Friday, April 15, 2011

கடமை வீரன்

கண்ணயர்ந்து
கனவிலிருந்தவன் மீது
கண்ணுப் போட்டதாரு
கால் செய்தததாரு!

கண்ணிமைக்கும் நேரத்தில்
கடன்களெல்லாம் கழித்து
கடும் வெயிலில்
கார்ப்பரேஷன் பஸ்ஸில்

கண்கலங்காம
கிளம்பிப் போறான் பாரு
கடமைவீரன்!

பி.கு
3011-ல் வரும் பிற்கால சந்ததியினர் இதைப் நாட்டுப்புற பாடலாய் போற்றிப் பாடுவர்!

Saturday, April 09, 2011

Tough Times

Sometimes life could be tough, very tough. Lightning could strike you twice but you may not have the liberty to swear like John Mclane and say, Same shit happens to the same man twice" or ask yourself or any one "Why Me? Why Me?"

Tough times definitely test you a lot, they help to realize, "Who you are really?" not only to the world but more importantly to yourself. Either they bring out the satanic nature or the saint.

If one could beat the crap out of tough times and get out of it safely smelling like roses, the pleasure is the real bliss. If it beats the crap out of you and you get out of it smelling otherwise, the pain is a real curse.

Tough times could turn out to be either be divine or diabolical.

I could go on and on the dual nature of the tough times, but in my time as a IT techie, I have learnt a trick or two. "Thou shall not reinvent"

I hereby quote Dickens, who, I feel has already captured,  which holds true for most of the moments in our tumultuous life.

"It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair, we had everything before us, we had nothing before us, we were all going direct to Heaven, we were all going direct the other way—in short, the period was so far like the present period, that some of its noisiest authorities insisted on its being received, for good or for evil, in the superlative degree of comparison only."

-Tale of Two Cities, Charles Dickens
p.s
Still this too holds true!

Friday, April 01, 2011

கேவலமான கேப்டன்!

பாலிடிக்ஸ் பத்தி எல்லாம் இந்த பால் மணம் மாறா பாலகனுக்கு[நான் தான் அது] எல்லாம் என்ன தெரியும் என்று எண்ணிக் கொண்டு இவ்வளவு நாள் அரசியல் அசிங்கத்தைப் பற்றி எழுதியதில்லை.

ஆனா தெருமுக்கு டீக் கடையில டீ குடிக்கும் தமிழன் மற்றும் இந்திய அரசாங்கத்தால தப்பாக அச்சிடப்பட்ட வாக்காள அடையாள் அட்டை இருக்கும் காரணத்தாலும் சமூக பொறுப்பின் காரணத்தினாலும் இதோ அரசியல் ஆரம்பம்.

விஜயகாந்த் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறார் என்றவுடன், அவர் முதல்வர் ஆனால் நிச்சயம் தமிழ்நாட்டைக் காலி செய்து விட்டு தெலுங்கு நாட்டிற்கோ அல்லது கன்னட நாட்டிற்கு குடிப் போய் விடுவேன் என்றெல்லாம் சொன்னதுண்டு.

பகல் கொள்ளைகளைக் கண்டு கலங்கி விஜய்காந்த் வந்தால் தான் என்ன? நிச்சயம் நல்ல மாற்று தான் என்றெல்லாம் வீபரிதமான எண்ணமெல்லாம் விளைய ஆரம்பித்தது!

இந்த தேர்தலில் மூன்றாவது அணி அமைத்திருந்தால் முதல்வர் பதவி மிஸ்ஸாகியிருக்காது என்றெல்லாம் சிந்தனை சிறகடித்தது.
வடிவேலுவின் அரைவேக்காட்டுப் பேச்சைக் கேட்டபின் இவ்வளவு தானா திமுகவின் டக்கு. எப்படி இருந்த இவர்கள் இப்படி ஆகிவிட்டார்களே இதற்காகவாவது விஜய்காந்த வெல்ல வேண்டும் என்று விரும்பினேன்.

 படங்களில் காலை
சுழட்டி சுழட்டி அடிக்கும் கேப்டன் நிஜத்தில் கையை சுழட்டி சுழட்டி தன் சொந்தக் கட்சி வேட்பாளரை அடித்தது வடிவேலு சொல்வது போல அவமானம்,அசிங்கம். அது மட்டுமல்ல, அடிவாங்கிய வேட்பாளரை விட அடிச்ச கேப்டனுக்குத் தான் டேமேஜ் அதிகம். 

என்னாது அடியா எங்கு எப்போது அப்படி எல்லாம் நடக்கவில்லை என்று வேட்பாளர் மறுக்க மறுபடி மறுபடி கடுப்பேற்றும் விதமாக மிகவும் கேவலமாக அடித்ததில் என்ன தவறு எனக் கேட்கும் கேப்டனை எதால் அடிப்பது?ஒன்று மட்டும் நிச்சயம், இன்னுமா உலகம் உங்களை மதிக்கும் கேப்டன்?  

இப்படிக்கு நரசிம்மாவை பார்க்க முடியாமல் விருதகிரியை விரும்பி பார்த்த, கேப்டனின் உண்மை ரசிகன்! ;)