Sunday, April 29, 2007

Zeno's Zen

The Purpose of the education is to train your mind to think, rather than burden it with facts.

-Einstein

The purpose of engineering is to train you to search for codes in Google, rather than learning to program.

-Yours Truly,

Zeno.

Friday, April 13, 2007

இரகசிய சினேகிதிக்காக

அமெரிக்காவிலிருந்து
அம்மாவுக்கு அட்டிகை
அப்பாவுக்கு கடிகாரம்
அக்காவுக்கு கைப்பை
அண்ணனுக்கு சட்டை

அவளுக்கு,
எனையே வேண்டாம் என்றவளுக்கு
எதை வாங்கி வர?

இரகசிய சினேகிதிக்காக

பிடித்திருக்கிறதா என கேட்டேன்
பிடிக்கவில்லை என சொன்னாள்

பொய் சொல்கிறாய் என்றேன்
பதிலை சொன்னேன் என்றாள்

பாசாங்குக்கு காரணம் கேட்டேன்
பாஷைகள் நமக்கு வேறுவேறு

பாதையும் நமக்கு வேறுவேறு
பதிலை பகன்றால் இவ்வாறு

பிரிந்து சென்றோம் இவையனைத்தையும்
பார்வையில் மட்டுமே பேசிவிட்டு

இரகசிய சினேகிதிக்காக

கண்கள் குருடாகி விட்டது
உனைப் பார்த்தும் பாராததால்

வாய் ஊமையாகி விட்டது
உன்னுடன் பேசாததால்

காது செவிடாகி விட்டது
உன் குரலை கேக்காததால்

மனமோ மரத்து விட்டது
உனைப் பற்றி நினைக்காததால்

மூளையோ மழுங்கி விட்டது
உனைப் பற்றி யோசிக்காததால்

உடல் உணர்ச்சி இல்லாமல்
உயிர் நீ இல்லாமல்!

Wednesday, March 28, 2007

Zen of Others

"The most likely way for the world to be destroyed, most experts agree, is by accident.
That’s where we come in. We’re computer professionals. We cause accidents."
-Nathaniel Borenstein, inventor of MIME.

Saturday, March 24, 2007

Zen of Others

“If each of us hires people who are smaller than we are, we shall become a company of dwarfs. But if each of us hires people who are bigger than we are,we shall become a company of giants.”
- David Ogilvy

Friday, March 23, 2007

இரகசிய சினேகிதிக்காக

அவளுக்கு என் ஆட்டு தாடி பிடிக்குமா என்ற
ஆராய்ச்சியில் அவன்
அவளுக்கு அவனையே பிடிக்காது என்ற
ஆச்சரியம் அறியாமல்

Monday, January 29, 2007

Sunday, January 28, 2007

இரகசிய சினேகிதிக்காக

வான் ஊர்தியில் உயரப்பறக்கையில்
வீதிகளில் உலவிய என் தேவதையை
வான்மேகங்களிலும் விண்மீன்களிலும் தேடினேன்
வீண்வேலையென உணர்ந்தேன் அவள்
உடன் வராதது உரைத்தவுடன்!

Friday, January 26, 2007

இரகசிய சினேகிதிக்காக

சில நேரங்களில் பிரியமாய்
பல நேரங்களில் பிசாசாய்
எல்லா நேரமும் உனக்கு
Multiple Personality Disorder-ஓ