Friday, October 28, 2011

IT இனி மெல்ல சாகும்

முன்குறிப்பு:பின் வருவன உண்மை மிக உண்மை. மிகை சிறிதும் இல்லை.

தமிழ்நாட்டின் சாலையோரத்தில் மரங்கள் மத்தியில் இருக்கும் எண்ணற்ற கட்டடங்களில் ஒன்று. பொறியியல் கல்லூரி என அவற்றின் முன் ஒரு போர்டைக் காணலாம்.

அங்கு நாளை பார்ட்டூன் 500 கம்பெனிகளில் ஏதாவது ஒன்றின் கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும் மென்பொருளின் ஒரு பகுதியை உருவாக்கவோ, நிர்வகிக்கவோ அல்லது ஒழுங்காக வேலை செய்கிறதா என்ற பரிசோதனை செய்யவோ ஆட்களை அள்ளிக் கொண்டு செல்ல வந்திருக்கும் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தின் நேர்முகத் தேர்வு.

கேட்கப்பட்ட ஒரு கேள்வி, ”How will you determine, whether a number is prime or not?”

சொல்லப்பட்ட பதில்,“By dividing it by zero!”

குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பதிலளித்தவர் பள்ளிக்கூட தேர்வுகளில் சதம் கண்டவர்!

கடைசியில் கேள்வி கேட்டவரை பதில் அளித்தவர் கேட்டார் ஒரு கேள்வி, ”How did i do my Interview?”

கேள்வி கேட்டவர், Horrible என பதில் சொல்லி விட்டு நீ என்ன சொல்ல விரும்புகிறாய் எனக் கேட்டார்.

எனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை என்று பதில் வந்தது.

இதில் மிக ஆச்சரியம் என்னவெனில், இப்படிப்பட்டவருக்கு வேலை கிடைத்தது அல்ல. Horrible என்றால் என்னவென்று பதில் அளித்தவருக்கு இன்னும் தெரியாது என்பது கேள்வி கேட்டவருக்கு இன்னும் தெரியாது.

பின்குறிப்பு:

1.நான் இந்த நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் கால் வைத்தது கூட இல்லை. ஏன் என் காற்று கூட பட்டதில்லை!

2.அன்றும் இன்றும் ”C code for average of n numbers” கூட தெரியாதவன் தான் நான்!

3.என்னைப் பொறுத்தவரை, பிரச்னை, அரசாங்கத்திடமும் நிறுவனத்திடமும் தான்!கல்லூரியிடமோ மாணவர்களிடத்தோ அல்லது ஆசிரியர்களிடமோ இல்லை!

4.தலைப்பில் தவறு இருக்கிறது.இனி மெல்ல சாகாது, செத்து விட்டது!

6 comments:

Ramesh said...

Given the fact that literally zeno is corrent in பின்குறிப்பு - நான் இந்த நிறுவனத்தில் அல்லது கல்லூரியில் கால் வைத்தது கூட இல்லை (because he came by car) and ஏன் என் காற்று கூட பட்டதில்லை!(because the place is airconditioned), I am allowed to speculate whether the esteemed philosopher was the interviewer or interviewee :)

Appu said...

ROTFL! Inspite of the disclaimer 2, pinning the disclaimer 1 on me is too much! If i was the interviewer i would have never made the offer, no matter how much i hate the company ;)

RamNarayanS said...

குப்பைக்குள் மாணிக்கம் தேடுறதை விட்டுட்டு குப்பையை கிளறப்டாது.

Disc,#2. Does it apply to Tcl/Perl?

Appu said...

Have never been near perl too :)கிளறாம மாணிக்கத்தை எப்படி தேடறது?

Giri Ramasubramanian said...

:))))

Unknown said...

:))))