Silver Jubilee தாண்டி Golden Jubilee வரை சென்று விடுமோ என்று கவலையோடு கணக்கு பண்ணி கொண்டு இருந்தான், அவன் பார்த்த பெண்களின் எண்ணிக்கையை!
அவன் அப்படி ஒன்றும் அழகில்லை ஆனால் அவ்வளவு மோசமுமில்லை.
அம்பானி அல்ல, அதற்காக அல்லக்கையும் அல்ல.
அவன் எதிர்பார்த்ததும் சூப்பராக டக்கராக இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. சப்பையாக டோச்சாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான்.
ஆரம்ப காலத்தில், Monday Morning office செல்பவன் போல வெள்ளிக்கிழமை மாலையில் Five Star Hotel-ன் காபி ஷாப் சென்றவன் இப்பொழுது எல்லாம் friday casual wear-ல் Coffee day வர ஆரம்பித்து விட்டான்.
இப்படியே போனால், T-Shirt, Short-ஸ் உடன் தெருவோர டீக்கடையில் போகிற போக்கில் பார்க்க வேண்டியது தான் என்று எல்லாம் Creative thoughts எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. ஆனால் எவ்வளவு எட்டிப் பார்த்தும் வர வேண்டிய பெண் வரும் அறிகுறி தெரியவில்லை.
பார்த்தவுடன் பிடிக்காததால், எதுவும் சாப்பிட மறுத்தவள், [பிடித்தால் தான் Tissue Paper-ல் கை துடைக்க வேண்டும் என்று வீட்டில் சொல்லி அனுப்பி இருப்பார்கள் போல]. எனக்கு உங்களை பிடிக்கவில்லை, என் பில்லை செட்டில் செய்வதும் பிடிக்கவில்லை என்று பில்லில் பாதியை தந்தவள், எனக்கு உங்களோடு ஒத்து வரும் என்று தோன்றவில்லை ஆனால் என் தோழி ஒருத்தி உங்களுக்கு சரி வருவாள் என்று எல்லாம் சமூக சேவை செய்தவள், என்று எவ்வளவோ பார்த்தாயிற்று, இவள் வருவாளா மாட்டாளா என்றும் தான் பார்போம் என்று பக்கத்து டேபிளில் இருந்தவளை அவ்வப்பொழுது பராக்கு பாக்க ஆரம்பித்தேன்.
ஒருவழியாக வந்து சேர்ந்தவளை பார்த்தவுடன், மனதில் மணி, தலைக்கு மேல் வெளிச்சம் என்று எல்லாம் எதுவும் நடக்கவில்லை.
சாரியில் வந்தவள், லேட்டாக வந்ததற்கு சாரி கூட சொல்லாமல் பேச ஆரம்பித்தாள். பேசினோம் பேசினோம் பேசிக் கொண்டே இருந்தோம். நெடு நாள் பழக்கம் இல்லை எனினும் இனி மேல் பழகினால் இவளோடு தான் கலந்து பழக வேண்டும் என்று முடிவு செய்தேன். இனி ஒவ்வொரு கணமும் உன்னோடு தான் என கணப் பொழுதில் தோன்றியதை அந்தக் கணமே சொல்லவும் துணிந்தேன்.
பில் வச்சி ரொம்ப நேரம் ஆச்சு, கடை கூட மூடற டைம் என்று நின்றான் வையிட்டர். அவனிடம் இளித்து வழிந்து சாரி சொல்லும் சமயத்தில் பில்லை அவள் எடுத்து விட்டாள். நல்ல வேலை பிடித்திருக்கு என்று நான் சொல்லவில்லை, அவளுக்கு பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த போது அவள் கேட்டாள், பில்லில் பாதியை நான் தருகிறேன். உங்களுக்கு சம்மதம் என்றால் உங்கள் வாழ்விலும் என்று?
P.S
Please thou shall not doubt my creative intelligence!
5 comments:
Good one. Twist at the last line.
But ஆனா (I picked this phrase up from someone)
All pointers to RS2. வாழ்த்துக்கள்.
யாரது? சொல்லாமல் நெஞ்ஜள்ளிப் போனது?
No doubting your creativity. After all, creativity spouts from certain experiences. :-D
Superb zeno. The last line twist was totally a bolt from the blue.
We'll accept your remark on your creativity (we know that it is superb anyway), but as RamMmm says, there 's always something to light the creative spark !!
@Ram, which phrase did you pick from some one and who is that someone?
No RS2 anywhere in sight! off late even started feeling, There will not be any RS-2 as i have started thinking rationally ;)
Well it is not my experience, and the general consensus is "it is too filmy masala and a never ever scenario"
@ramesh, thanks. yeah there is always something. to be honest, this is more like one of the earlier one i wrote sometime in last december.
But ஆனா. It is a redundant statement.
The romantic zeno is dying to leave way for a pragmatic zeno? :-( Too bad for the Ragasiya Snegithee #2. So, we'll lose some of the goodies that came our way for RS-1 with RS-2?
Fiction derives from life and life derives from fiction. auto-symbiotic relationship.
Long live the romantic zeno!
yeah yeah like nadu centre!! :P
I have considered myself (and (was)considered as pragmatic ;)
There have been times i have felt i could never bring myself to write poems and writing poems to be most difficult and challenging.
I am really surprised at my romantic as well as poetic attempts!
Hmm life is strange and full of surprises, we never know what lies in store ahead!
Post a Comment