Monday, June 21, 2010

நம்மைப் போல் ஒருவன்

அப்பா வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பக்கத்தில் பெண் குழந்தை அம்மாவுக்கு நெக்லஸ்  செய்து கொண்டிருக்க கதவு தட்டப்படுகிறது. திறக்கும் அப்பாவின் மண்டை மீது உருட்டுகட்டையில் அடி. கைகள் கட்டப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு, அம்மாவுக்கும் அதே மரியாதை. இதனையும் அரங்கேறும் சமயம் கூட வந்தவன் வீட்டில் இருப்பதை எல்லாம் சுருட்டுகிறான். அப்பொழுது வந்து நிற்கிறது அந்த குழந்தை. குழந்தைகளுக்கு என்னை மிகப் பிடிக்கும் என்று சொல்லியவாறு அதை தூக்கிக் கொண்டு செல்ல அப்பா சுயநினைவிழக்க காட்சி வெட்டப்படுகிறது.[பின் வரும் வன்முறைக் காட்சிகள் எவ்வளவு கொடூரமாய் இருக்கும் என்பதற்கு இது ஒரு சாம்பிள்]

நோயாளி செத்தாலும் நான் செய்யும் ஆபரேஷன் சக்சஸ் என்னும் சொல்லும் டாக்டரைப் போல், என் கட்சிக்காரனுக்கு நீதி கிடைக்க விட்டாலும் நான் ஆஜரான வழக்கு ஜெயிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஒரு அரசாங்க வக்கீல்.

கொலை செய்தவன், கூட திருடியவன் தான் கொலை செய்தான் என்று நான் சாட்சி சொல்லத் தயார் ஆனால் எனக்கு குறைந்த தண்டனை வாங்கித் தர வேண்டும் என டீல் போட அதை வக்கீல் ஒப்புக் கொள்கிறார். யாரையும் கொல்லாதவனுக்கு மரண தண்டனை விதிக்கப் படுகிறது.

கோபம் கொண்ட அப்பா பழி வாங்க சுபம் என முடியும் கதை தானே என்று எல்லாம் நினைக்க கூடாது.

சரியாக பத்து வருடங்கள் கழித்து, சொந்த மகளின் அரங்கேற்றத்துக்கு செல்லாமல், அதற்கு மனைவியிடம் திட்டு வாங்கி கொண்டே,மகளின்  மனம் நோகாமல் இருக்க அவள் செய்த ரொட்டி துண்டை கொறித்து விட்டு அவசர அவசரமாக கிளம்புகிறார்.  தான் தண்டனை வாங்கி கொடுத்தவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்லப்படுவதை பார்க்க. [முந்தைய பாராவில் சொல்லப்பட்ட வழக்கு தான் என்று எல்லாம் விலாவரியாக சொல்ல வேண்டும் என்று எல்லாம் எதிர் பார்க்க படாது]


கிளம்பும் போது உடன் வரும் பெண்மணியிடம் ஒருவர் தூங்க செல்வது போல் இருக்கும், அவ்வளவு தான் ஒரே வித்தியாசம் இவர் திரும்பி எழ மாட்டார் என்று சொல்லும் போது, அந்த கைதி அப்படி சாக மாட்டான் என்று ஊகித்தால் உங்களுக்குள் ஒரு சினிமாக்காரன் ஒளிந்திருக்கிறான் என அர்த்தம்.
 
 அவனை கொல்லப்படும் திரை திறக்கும் போது வக்கீலின் பெண் அரங்கேற்ற திரை திறப்பது என்று பொயடிக் டச்! [இப்படி பல டச்கள் உண்டு]
 
மரணத் தண்டனைக் கைதி  இப்படி தான் சாக வேண்டும் என்று சட்டம் சொல்கிற படி சாகாமால், ரத்தம் கக்கி கொடூர முறையில் சாவதால் கொலை விசாரணை தொடங்குகிறது. கொலை நடந்த இடத்தில் "உண்மையோடு போராட முடியாது" என்னும் பொருள் பட எழுதிய ஒரு பாட்டில் கிடைக்கிறது.

வழக்கு நடக்கும் போது ஆப்ருவர் ஆன குற்றவாளி இதையே தன்னிடம் சொன்னது வக்கீலுக்கு நினைவு வர அவனை சந்தேகித்து அவனை பிடிக்க கிளம்புகிறது.

அவனை தேடி போலீஸ் வந்து கொண்டிருப்பதை ஒருவன் போனில் சொல்கிறான்.  போலீஸ் காரில் தப்பித்து போக வழியும் சொல்கிறான், அப்படி அவன் வந்து சேருமிடம் அந்த பெண்ணின் அப்பா தான் என்று சரியாக சொன்னால் படிப்பதை நிறுத்தி விட்டு தாரளமாக கோடம்பாக்கம் கிளம்பலாம்.

தன் மனைவியையும் குழந்தையும் கொன்றவனை முகமூடி அணிந்து  மிக கொடூரமாக கொலை செய்கிறான். அதை படமும் பிடிக்கிறான்.

போலீஸ் பிடிக்க வரும் போது, terminator படத்தில் அர்னாலட்  அறிமுகம் ஆகும் உடையில் சரண் அடைகிறார்.

விசாரிக்க வரும் வக்கீலிடம் அவர்களை கொல்ல ஆசை பட்டதுண்டு திட்டமிட்டதுண்டு என்று எல்லாம் சொல்கிறார்.  குற்றத்தை ஒப்புக் கொண்டாய் என்று வக்கீல் கிளம்பும் போது நான் கொன்றேன் என்று சொன்னால் தான் ஒப்புதல் என்று அவருக்கு படம் எல்லாம் சொல்லி விட்டு எனக்கு ஜெயிலில் தூங்க நல்ல மெத்தை கொடுத்தால் ஒப்புக் கொள்வேன் என்று டீல் போடுகிறார்.

டீலுக்கு ஒப்புக் கொல்லாத வக்கீல் இவரை கோர்ட்டில் ஆஜர் செய்யும் போது தானே வாதாடி பெயில் வழங்கவிருக்கும் சமயம் ஜட்ஜை கடுப்பேற்றி மீண்டும் ஜெயிலுக்குப் போகிறார். [இந்த ஜட்ஜ் தான் பழைய வழக்கிலும் ஜட்ஜ் என்று எல்லாம் தெளிவாக சொல்லாமல் புரிந்துக் கொள்ள வேண்டும்]

இடையில் முன்பு, கொலை செய்ததை படம் பிடித்ததை வக்கீல் வீட்டுக்கு அனுப்ப அது தான் அரங்கேற்ற வீடியோ என நினைத்து அவரின் குழந்தை பார்த்து விடுகிறது.

மெத்தை எல்லாம் தர முடியாது என வீராப்பு காட்டிய  வக்கீல் இதை கேள்வி பட்டவுடன் கொடுத்து தொலைக்கிறார்.

அடுத்த நாள் குற்றத்தை ஒப்புக் கொண்ட அப்பா நல்ல சாப்பாடு வேண்டும் என்று எல்லாம் கேட்கிறார். டீல் போட்டு நான் உனக்கு எதாவுது கொடுக்க நீயும் எதாவது கொடுக்க வேண்டும். உன்னிடம் கொடுக்க எதுவும் இல்லை என கிளம்பும் போது "ஒரு பெயர் சொல்லி அவன் உயிர் இருக்கிறது என்னிடம் கொடுக்க என்று சொல்கிறான்"

அந்தப்  பெயர் பத்து வருடங்களுக்கு முன்பாக நடந்த வழக்கில் எதிர் தரப்பு வக்கீல். அவர் மூன்று நாட்களாக  காணவில்லை என்று தெரிய வரும் போது அப்பாவுக்கு நல்ல சாப்பாடு என்று ஒப்புக்கொள்கிறார்கள்
 மெனு சொல்லி விட்டு சரியாக ஒரு மணிக்கு சாப்பாடு வர வேண்டும் என சொல்கிறான். சாப்பாடு சரியான நேரத்துக்கு வராத போதும் சாப்பிடுவதற்கு ஸ்பூன் வங்கிக் கொண்டு, காணாமல் போனவனை ஒளித்து வைத்திருக்கும் இடத்தை சொல்கிறான்.  

ஒளித்து வைத்த இடத்திற்கு 15  நிமிடத்தில் போய் சேர்ந்தால் எதிர் காட்சி வக்கீல் ஆக்சிஜன் உதவியோடு உயிரோடு புதைக்கபட்டிருப்பார். அந்த ஆக்சிஜன் சப்ளை சரியாக 1: 15 க்கு நிறுத்தப்பட்டிருக்கும்.  சரியான நேரத்திற்கு சாப்பாடு போயிருந்தால் ஒரு உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, கைது செய்யப்பட்ட அப்பா உடன் இருந்த கைதியை கொன்று விட்டார் என்றும் தனிமை சிறையில் அடைக்க பட்டு விட்டார் என்று செய்தி வரும்.

தனிமைச் சிறையில் இருக்கும் போது சந்திக்க வரும் வக்கீலிடம் இது ஆரம்பம் தான் இனி மேல் தான் ஆட்டம் ஆரம்பம் என்றும் இதில் சம்பந்த பட்டவர்கள் அனைவரையும்
கொல்வேன் என்றும் சொல்கிறார். தன் வழக்கில் நீதி கிடைக்க வில்லை என்றும் அதற்கு பாடம் கற்பிக்கவே இதை எல்லாம் செய்வதாக சொல்கிறார்.

 அடுத்த நாள் ஆறு மணிக்கு தன்னை எல்லா வழக்கையும் தள்ளு படி செய்து விடுவிக்க வேண்டும் என்றும் அப்பா  டீல் போடுகிறார்.இல்லை என்றால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்றும் மிரட்டுகிறார்.

இவன் யார் இவன் பின்புலம் என்ன என்று அப்பாவை பற்றி விசாரிக்கும்  போது அவர் வல்லவர் அசகாய சூரர்,  நினைத்ததை நடத்தியே முடிப்பவன் என்று எல்லாம் ஒருவர் கதை சொல்கிறார்.  அவன் சிறையில் இருப்பதே அவன் சிறையில் இருக்க வேண்டும் என திட்டம் போட்டதால் தான் இருக்கும் என்று எல்லாம் சொல்கிறார்.

அப்பா ஊர் முழுக்க ஒதுக்கு புறமான இடத்தில் இடம் வாங்கி இருப்பதும் தெரிய வருகிறது. ஆனால் எதற்கு எங்கே எனத் தெரியாமல்  சிண்டை பிய்த்துக் கொள்கிறார்கள்.

இதற்கிடையில் ஆறு மணி கெடு முடிகிறது. நம் வக்கீலின் உடன் பணி செய்பவர்களின்   கார்கள் எல்லாம் வெடித்து சிதறுகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு வரும் வழியில் மிலிடரி குண்டுத் தாக்குதல். எல்லாம் அப்பா ஜெயிலில் இருக்கும் போதே. உள்ளே இருப்பவனுக்கு யார் உதவுகிறார்கள் என்று ஒரு பக்கம் விசாரணை நடக்கிறது. அப்பொழுது அப்பா வாங்கிய இடம் எது எனக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் ஒரு இடம் ஜெயிலுக்கு பக்கத்தில். அப்பா சிறைக்கும் அந்த இடத்துக்கும் பூமிக்கு அடியில் லைட் எல்லாம் போட்டு வழி செய்து வைத்திருப்பார்.  

அது வழியே சென்று அவரின் செல்லை பார்த்தால் அப்பா இருக்க மாட்டார். ஜெயிலுக்கு பக்கத்தில் அப்பாவின்  இடத்தை சோதனை போடும் போது அந்த நகரின்  மேயர் அலுவலுக மேப் இருக்கும். மேயர் அலுவலகத்தில் பாம் இருக்கும்.

வழக்கம் போல் அதை செயல் இழக்க வைக்க முடியாது அனைவரையும் வெளியேற்றவும் முடியாது. வக்கீல் என்ன செய்தார்? அப்பா என்ன செய்தார்? யாருக்கு யார் எவ்வாறு பாடம் கற்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.

Law Abiding Citizen என்னும் இந்த படத்தை பார்த்த முடித்த  போது திரைக் கதையின்  ஓட்டை ஓடிசல்களோடு[அதை எல்லாம் சொன்னால் படம் பார்க்கும் சுவாரசியம் போய் விடும் ;) இவ்வளவு விலாவரியாக விமர்சனம் எழுதியுமா என்று நற நற என பல் உரசும் ஓசை காதில் படுகிறது ] எனக்கு ஏனோ "உன்னை போல் ஒருவன்" படமும் நினைவுக்கு வந்தது!


  

3 comments:

RamNarayanS said...

yoi, ivvlo periya review ezhudhi, kannu vali vara vechcha zenovukku en kandanangal. :-)

nalla kadhai poanga. :(

chennaigirl said...

First neenga etho kathai solreengannu nenachen. After sometime thaanga mudiyaama went and read the last para, appothaan purinjathu ithu movie review. Padikkave ennala mudiyala neenga eppadi paatheenga :(

Appu said...

@Ram, Actually the movie is good and worth watching!
The time i took to write was more than the time i took to watch the movie :)
The long review was intentional to test my patience, can i write for long hours as well as to get my mind off from other things! Too bad it was not gripping enough

@CG That is the intention, to give a feel that story is being narrated ;) Nice to know it was working. If you can digest a little bit of violence a good movie to watch